என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சென்னிமலை சுற்றுபுற கிராம பகுதி வயல்வெளி களில் பருத்திக்கறை பூச்சி படையெடுப்பு அதிகரித்து ள்ளது.
    • பல வருடங்களாக இந்த பூச்சி இனம் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பருத்தி க்கறை பூச்சிகள் அதிக அளவில் பெருகி உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுற்றுபுற கிராம பகுதி வயல்வெளி களில் பருத்திக்கறை பூச்சி படையெடுப்பு அதிகரித்து ள்ளது.

    சென்னிமலை வட்டார பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து ஒரு வாரம் மழை அதிகம் பெய்தது, மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்ப ட்டது.

    இந்த இதமான சூழ்நிலை நிலவுவதால் பல்வேறு வகையான பூச்சி இனங்கள் உற்பத்தி ஆகி உள்ளது.

    சென்னிமலை சுற்று வட்டார கிராமபுற வயல் வெளிகளில் மரங்கள் அடர்ந்த வேர் பகுதி, அதிக இலை தழைகள் உள்ள பகுதியில் கறுப்பு, சிவப்பு பூச்சி என்று சொல்லப்படும் பருத்திக்கறை பூச்சிகளின் உற்பத்தி அதிக மாக உள்ளது.

    இந்த பூச்சி இனம் பருத்தி சாகுபடி செய்துள்ள வயல் வெளிகளில் பருத்தி காய்களை தின்று விடும். இதனால் இதற்கு பருத்தி க்கறை பூச்சி என்றும் அழைக்கின்றனர். பல வருடங்களாக இந்த பூச்சி இனம் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பருத்தி க்கறை பூச்சிகள் அதிக அளவில் பெருகி உள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மயிலானந் (23). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் மயிலானந் மனஉளைச்ச–லுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால் மயிலானந்த்திற்கு அவரது தந்தை மற்றும் சகோதரி ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலானந் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி அம்மா நியாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசிக்கலாம் என்று கூறினார்.

    இந்நிலையில், அன்றைய தினம் மாலையே வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மயிலானந் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பத் நகரில் 250 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தில் 150 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன.

    நேற்று ஓசூரில் இருந்து விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று மற்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி மலிவு விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இன்று ஓசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய முடியாததால் தாளவாடியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே நேரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.104-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் வீற்றுத் தீர்த்து விட்டன. இதேப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இன்று முதல் கோபி, பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

    இதேப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை ஆனது. இதே போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை ஆனது.

    இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் விலை தொடர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரைகள் மீது திரும்பி உள்ளது. கீரை விலை மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை ஒரு கிலோ ரூ.10 -க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8-க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் எலுமிச்சம் பழம் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. தக்காளி, காய்கறி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.

    • டீ, பேக்கரி, உரக்கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
    • பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் 19-வது மைல்கல் பகுதியில் கான்கீரிட் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    விவசாயிகள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடையடைப்பு நடத்த வணிகர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வணிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    அதன்படி இன்று நம்பியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள எலத்தூர், செட்டிபாளையம், கூடகரை, ஆண்டிபாளையம், கடத்தூர், கரட்டுபாளையம், குருமந்தூர், அரசூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. டீ, பேக்கரி, உரக்கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    • பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் நாகராஜ் நேற்று வழக்கம்போல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து வந்தார்.

    பின்னர் பூஜை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, கோவில் பூசாரி சாமி கருவறையில் அலங்கார பணியில் இருந்தபோது, சாமி கும்பிடுவது போல வந்த 35 வயது மர்மநபர் கருவறைக்குள் நைசாக உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் செயினை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து பக்தர் போர்வையில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
    • சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீன்கள் வரத்து சற்று அதிகரித்து வந்தது.

    கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. மீன் வரத்து குறைவு எதிரொலியாக சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    குறிப்பாக வஞ்சரம் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் வெள்ளை வாவல் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விருப்பப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.1,300 ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    அதே சமயம் இறால், சீலா, மயில் மீன், பொட்டு நண்டு ஆகிய மீன்கள் கடந்த வாரத்தை விட இன்று விலை குறைந்துள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 8 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது .

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-250, வஞ்சரம்-1000, விளா மீன்- 350, தேங்காய் பாறை-500, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-750, இறால்-600, சீலா-450, வெள்ளை வாவல்-1300, கருப்பு வாவல்-850, பாறை-500, மயில் மீன்-700, பொட்டு நண்டு-400, கிளி மீன்-600, மஞ்சள் கிளி-600, கடல் விலாங்கு-350, திருக்கை-400, பெரிய திருக்கை-500, நகர மீன்-450.

    • லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்ம் வெப்படையை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    இதில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக சிவகிரியில் பங்களாபுதூரை சேர்ந்த சுப்பிரமணி (76), கவுந்தப்பாடியில் பாலக்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து(47), மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதியில் மதுவற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
    • கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலங்களான மண்ணாங்காடு வாய்க்கால் பாலம், எல்லை குமார பாளையம் வாய்க்கால் பாலம் மற்றும் எக்கட்டாம் பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவலசு வாய்க்கால் பாலம் ஆகிய 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகிய 2 பழுதடைந்த பாலங்களையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் கூடுதல் அகலத்துடன் புதிய பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் புதுவலசு வாய்க்கால் பாலம் மட்டும் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பதற்கு முன்பு புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொ டர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம்,

    கல்வித்துறை, காவல்துறை, கூட்டு றவுத்துறை, பொது ப்பணித்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, நெடு ஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொட ர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட ப்பணிகளையும் துரி தப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு கலெக்டர் அறி வுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர்- திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ்,

    கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வராஜன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாள ர்கள் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (ஈரோடு) மோகன், (பெருந்துறை) .உதயகுமார்,

    துணை இயக்குநர் (பொது சுகா தாரம்) டாக்டர் சோம சுந்தரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதல் அதிகரித்துள்ளது.
    • செடியின் இலை நுனியில் பச்சையம் இழந்து, மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, சத்திய மங்கலம், கொடுமுடி ஆகிய பகுதிகளில் 1800 ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 5 முதல் 6 வயதுடைய மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதல் அதிகரித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு உள்ளான செடியின் இலை நுனியில் பச்சையம் இழந்து, மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இலை காய்ந்து உதிரும். மகசூல் பாதிக்கப்படும்.

    எனவே செம்பேன் தாக்குதல் பயிரில் தென்பட்ட தும் ஒரு லிட்டர் நீரில் புரா ப்பர் ஜிட் 57 சதவீதம், இ.சி 2 மி.லி அல்லது பென்சாகுயின் 2 மி.லி அல்லது 0.80 மி.லி ஸ்பைரோ மெசிபைனுடன் 2 மி.லி டீப்பால் எனப்படும் ஒட்டும் திரவம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் செடியின் அனைத்து பாகங்களிலும் படும்படி காலை அல்லது மாலை தெளித்து செம்பேன் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×