சாலை விபத்தில் வாலிபர் பலி

மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான மாரிமுத்து.
பலியான மாரிமுத்து.
Published on

மொடக்குறிச்சி:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, பணமடலிசத்திரம் அடுத்த ஆராய்ச்சி பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிப்பாண்டி மகன் மாரிமுத்து 36. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

மாரிமுத்து சில மாதங்க ளாக மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் ஒன்றில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை பாசூர் ரோட்டில் இருந்து எழுமாத்தூர் நோக்கி அதே ஊரை ச் சேர்ந்த பொன்னு சாமி என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

பொன்னுசாமி இருசக்கர வாகனத்தை ஓட்ட மாரிமுத்து பின்னால் அமர்ந்து கொண்டு அதி வேகமாக வந்த பொழுது, எழுமாத்தூர் பொன்காளி யம்மன் கோயில் அருகே நிலைத்தடுமாறி சாலை யோரம் இருந்த கல் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னு சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து உறவின ர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com