என் மலர்
ஈரோடு
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பவானி:
பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி வட்டார தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் விஜயாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடியில் அதிகமான பணி சுகாதாரத் துறை பணிகள் செய்யப்ப டுகின்றன. அதனால் தான் அங்கன்வாடி ஊழியர்களு க்கு 42 வயதில் பிஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பதவி உயர்வை வழங்கிட வேண்டும். இல்லை என்றால் சுகாதாரத் துறை பணியை கண்டிப்பாக புறக்கணி ப்போம்.
அதிகமாக உள்ள காலி பணிகளினால் ஒரு ஊழியர் இரண்டு மூன்று மையங்களில் பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை உள்ளது.
எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பவானி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் என 50க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் பர்கூர் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் வி.கற்பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி வரவேற்புரை யாற்றினார்.
கூட்டத்தில்1993 அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு மேற்பார்வை யாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் 5 ஆண்டு பணி முடிந்த குரு மைய ஊழியர்களுக்கும் 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,
காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.
ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும்.உள்ளி ட்ட பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.
- ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை யானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும்.
கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபா ரிகள், உள்ளூர் சில்லரை வியாபா ரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆடிப்பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:
ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. ஆடி மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.
குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.
வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் முழுமையாக வரும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், சாய் தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர். இதில் சாய் தர்ஷன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று இரவு சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டில் அருகே உள்ள பகுதியில் விளையாடு கொண்டு இருந்தான். அங்கு மின் கம்பம் இருந்தது. அதன் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அப்போது சாய் தர்ஷன் விளையாட்டு ஆர்வத்தால் மின் கம்பத்தில் இருந்த ஸ்டே வயரை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சாய் தர்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதில் படுகாயம் அடைந்த சாய் தர்ஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாய் தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் மாணவனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி செட்டிபாளையம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு வந்து அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவனை மின்சாரம் தாக்கிய போது அந்த பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர். மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை.
- சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்த பி. மேட்டுப்பாளையம், பூ மாண்டக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்கு மார்(35) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக கேட் முன்பு திடீரென தண்ணீர் பாட்டிலில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் உடனடியாக ஓடிவந்து அவரிடம் இருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அப்போது ஜெயக்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு வருகிறோம். இதனையடுத்து எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசைகள் போட்டும், சிமெண்ட் செட்டுகள் போட்டும், ஆடு மாடுகளை கட்டியும், ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவருக்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
இது குறித்து நான் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கிட்டத்தட்ட 2 வருடமாக கழிப்பிடம் கட்ட போராடி வருகிறேன். நான் ஊர் மக்கள் நன்மைக்காக பாடுப்பட்டு வருகிறேன். இது சம்பந்தமாக பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் மனு கொடுத்து அவர்கள் சம்பந்த ப்பட்ட நபரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லியும் அவர் அகற்றாமல் உள்ளார். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அந்த இடத்தை மீட்டு கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீய
- தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தாடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் ஆப்பகூடல்- பவானி மெயின் ரோட்டில் தகர செட் மற்றும் தென்னை ஓலையிலான ஒரு ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இரு ந்தது.
இந்த நிலையில் இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.
இதையடுத்து தீ அணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொட ர்ந்து அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்த னர். இதில் ஓலை கொட்ட கை எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது. இதில் ஓட்டலில் இருந்த ரேஷன் கார்டு, டி.சி., மார்க் சீட், இட பத்தி ரம் உட்பட பல்வேறு பொரு ட்களும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெடுஞ்சா லை விரிவு படுத்துவதை காரணம் கூறி எங்களை அந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு மாற்றினர்.
- வீரப்பன் சத்திரம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஈரோடு ஆர்.என்.புதூர், சூரியம்பா ளையம், அன்னை தெரசா நகர், 68 ஏ மாயவரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் முதலில் பவானி - ஈரோடு சாலையில் குடியிருந்தோம். நெடுஞ்சா லை விரிவு படுத்துவதை காரணம் கூறி எங்களை அந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு மாற்றினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம்.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் எங்களுக்கு பட்டா இல்லை. பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை பட்டா கிடைக்க வில்லை.
மேலும் எங்கள் பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி இல்லை.
இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மின்சார வசதி செய்து தரக் கோரி மின்வாரியத்திடம் கேட்டால் பட்டா இல்லாத இடத்தில் மின் வசதி செய்து தர முடியாது என்று கூறி வருகின்றனர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக எங்களது குழந்தைகள் மண் எண்ணை விளக்கில் படித்து வருகின்றனர்.
மேலும் முறையான சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சிலர் நாங்கள் குடியிருக்கும் பகுதியை காலி செய்ய சொல்லி மிரட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கி, மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கேட்டுக்கொ ள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.
இதேப்போல் வீரப்பன் சத்திரம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,400 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தில் ஒரு பகுதி சிதலமடைந்ததன் காரணமாக அந்தக் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
நாங்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாங்கள் ஒன்று சேர்ந்து மாணவிகளுக்கு மூன்று கழிப்பிடம் கட்டிக் கொடுத்து உள்ளோம்.
புதிய கட்டிடம் கட்டித் தந்தால் மாணவிகள் படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே இடித்து அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
- இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும்.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் உள்ள டங்கிய கோவில் ஆகும்.
அதேபோல் இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி பரிகார ஸ்தலம், சுற்றுலா ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
தினசரி இந்த கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து காவிரியில் புனித நீராடி பரிகார பூஜை செய்து பின்னர் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அதேபோல் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு இந்து அறநிலைய த்துறை சார்பில் தினசரி அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதான மண்டபத்தின் மேற்கூரைகள் சிமெண்ட் சீட்டினால் தற்போது உள்ளதை அப்பு றப்படுத்தி விட்டு புதிதாக ஓடுகள் மேய்ந்து மேற்கூ ரைகள் அமைக்க இந்து சமய அறநிலைத்துறை உத்த ரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இந்த பணி முடியும் வரை பக்தர்க ளுக்கு ராஜகோபுரம் பகுதி யில் உள்ள கோவில் மண்ட பத்தில் தற்போது அன்ன தானம் வழங்கப்பட்டு வருகி றது குறிப்பிடத்த க்கதாகும்.
- ரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
- இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஈரோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் அயிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). திருமணம் ஆனவர். ஒரு குழந்தை உள்ளது. பிரவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.
பிரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஓட்டல் அருகே மாடி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு பிரவீன்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் இன்று காலை வேலைக்கு வர வில்லை.
இதையடுத்து ஓட்டலில் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
கழுத்தை அறுத்து தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிரவீன்கு மார் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொ லை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பிரவீன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சுள்ளகந்தன் வலசை சேர்ந்தவர் கோவிந்தன்(36). இவர்மகளிர் குழுவில் கடன் பெற்று அந்த பணத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் வாங்கி அந்த வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.
தொழில் நஷ்டம் அடைந்ததால் வாகனத்திற்கான மாத தவணை 2 மாதமாக செலுத்தவில்லை. இதனால் கோவிந்தன் சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தன் திடீரென மயங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கோவிந்தன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதார மாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.21 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதார மாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.21 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும்,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம்,
பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்திராண்டிபாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
- தடப்பள்ளி வாய்க்காலில் சம்பவத்தன்று மூதாட்டியின் உடல் மிதந்து வருவதாக கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த தோண்டாராயன் காடு, சவண்டப்பூர் ராஜா பண்ணாடி நோய் வயல் அருகே உள்ள தடப்பலி வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 60 வயது முதல் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதந்து வருவதாக கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
மூதாட்டி குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






