என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணிகள் ஆய்வு"

    • விவசாய பண்ணை பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    அம்மாப்பேட்டை:

    தமிழ்நாடு அரசு உலக வங்கி திட்டத்தில் நீர்வள, நிலவளத் திட்டம் பகுதி 1 மற்றும் பகுதி 2 மூலம் தமிழ்நாட்டில் உள்ள 47 ஆறுகளின் உபவடிநிலப் பகுதிகளை மேம்பாடு செய்ய உலக வங்கியின் 70 சதவீத பங்களிப்பு தொகை ரூ.2,962 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 30 சதவீத பங்களிப்பு தொகை ரூ.888.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நீர்வள, நிலவளத்திட்டம் 1 மற்றும் 2 பகுதிகள் மூலம் சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களில் நீர்வளத்துறை, வேளா ண்துறை,

    தோட்டக்க லைத்துறை, வேளாண்பொறி யியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மீன்வள த்துறை சார்ந்த துறைகள் மூலம் ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் பகுதி 2-ல் சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேட்டூர், நொய்யல், திருமணிமுத்தாறு, காவேரிப்பட்டணம் ஆகிய உபவடிநில பகுதிகளில் 103 குளங்கள், 96 அணை க்கட்டுகள் மற்றும் 3 கால்வாய்கள் 119.26 கி.மீ. மேம்படுத்தப்பட்டு 27,757.61 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளை நீர்வள மேலா ண்மை நிபுணர் மற்றும் இணை பணிக் குழுத் தலைவர் ஜோப், முதன்மை சமூக மேம்பாட்டு நிபுணர் வருண்சிங் ஆகியோர் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேட்டூர் மேற்குக்கரை கால்வாய், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயப் பண்ணை, சங்கரகவுண்ட ன்பாளையம் விவசாயப் பண்ணை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது நீர்வள மேலாண்மை நிபுணர் கே.சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை நிபுணர் சுற்றுச்சூழல் நிபுணர் ஜுதித் டிசில்வா, சிறப்பு கட்ட மைப்பு நிபுணர் ஜி.விஜிய ராம்,

    பொறியாளர் ஆர்.ராமன், நீர்வளத்துறை, மேல்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.அன்பழகன், மேட்டூர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் பி.சிவக்குமார்,

    கோவை சுற்றுச்சுழல் கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது இத்திட்டதை குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    • உலக வங்கிக்குழு பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள பாசன மேலாண்மையை நவீனமயமாக்கும் வகையில் தமிழக அரசு உலக வங்கி பங்களிப்புடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

    நீர்பாசன விவசாயத்தின் உற்பத்தி திறன் மற்றும் கால நிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துதல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    ஈரோடு மாவட்டத்தில் நீர்வள நிலவளத் திட்டமானது ரூ.6.12 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கீழ்பவானி வடிநிலப்பகுதியில் நீர்வளத்துறையின் மூலம் 8 அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வேளாண்துறை சார்பில் உழவர் வயல்வெளி பள்ளி, மண்புழு உரம் தயாரித்தல், தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி உற்பத்தி, பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நிலவள நீர்வளத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கிக்குழு பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் குழு உறுப்பினர் சாருலதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, திட்ட நிபுணர்கள், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆய்வின் போது திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது கீழ்பவானி வடிநில வட்டத்தில் நீர்வளம் நிலவளம் திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளதாக உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் சாருலதா பாராட்டுகளை தெரிவித்தார்.

    • விக்கிரவாண்டி பேரூராட்சியில் திட்டப்பணிகள் ஆய்வு நடைபெற்றது.

    விழுப்புரம்:

    சென்னை, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் விக்கிர வாண்டி பேரூராட்சி யில் திடீர் ஆய்வு செய்துகு ளம்மே ம்பாட்டு பணிகளை யும், குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியை யும், பஸ் நிலை யத்தி லுள்ள சுகாதார கழிவறை களையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வி ன்போது பேரூ ராட்சி தலைவர் அப்துல் சலாம்,துணைச் தலைவர்பாலாஜி, கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர். 

    ×