என் மலர்
ஈரோடு
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,118 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய் 16 காசுக்கும், அதிகபட்ச விலையாக 21 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 19 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,080 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.
- 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
- இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மற்றும் சென்னி மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னிமலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் குட்ட பாளையம் குப்பிச்சி பாளையம் மற்றும் இதர வருவாய் கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் உள் மாநில பயிற்சிக்கு உழவன் செயலி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் அத்தியேந்தலில் சிறுதானிய மகத்துவ மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் புதிய ரகங்கள் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான எந்திரங்கள் குறித்து தலைவர் பேரா சிரியர் வைத்தியலிங்கன் மற்றும் உதவி பேராசிரி யர்கள் விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் விவசாயிகள் வயல்களில் பயிரிட்டுள்ள சிறுதானிய பயிர்களை நேரிடையாக கண்டனர். இதில் அவர்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் 50 கிலோ சிறுதானிய விதைகளை வாங்கினர். அதை தங்கள் வயல்களில் இந்த வருடம் பயிரிட உறுதி அளித்தனர்.
மேலும் விவசாயிகள் காமாட்சி அம்மன் சிறுதானிய உற்பத்தி நிறுவனத்தின் சிறுதானிய மதிப்புகூட்டல் நிறுவனத்தை பார்வையிட்டு விபரங்களை கேட்ட றிந்தனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் சதிஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (13-ந் தேதி) நடக்கிறது.
இதையொட்டி பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம்,
திருவேங்கிடம் பாளையம் புதூர், கந்தா ம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளை யம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர,
சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்திநகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
- காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
- தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து தொட்ட காஜனூர் செல்லும் சாலையில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாலையில் இருபுறம் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இன்று காலை பள்ளி -கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், வியாபாரத்துக்கு சென்ற வியாபாரிகள், வேலைக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே பலத்த சூறாவளி காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழக- கர்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தமிழக-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து ஆசனூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி- 24, சத்தியமங்கலம் - 6, கொடுமுடி - 6, கோபி - 2.
- நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
- முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது. கூடுதல் வரி வசூல் கிடைக்கும், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று அரசு சொன்னது. இதுவரை 12 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுக்கே சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை.
சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது புதிதாக அமலாக்கத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள் என்று செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும்.
போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இது போன்று அமலாக்கத்துறையை, வணிகர் மத்தியில் நுழைய விட்டால் ஜி.எஸ்.டி. சோதனை என்ற அடிப்படையில் முழு அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய வணிகர்கள், வணிகத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும், அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
மத்திய, மாநில அரசுகள் அமலாக்கத்துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- மின் தடையை கண்டித்து சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மின் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் மின் தடையை கண்டித்து ராஜன் நகர் பவர் ஹவுஸ் எதிரே உள்ள சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார், ராஜன் நகர் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மக்கள் 25 நாட்களாக மின்தடையால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மின்பழுதை சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக உங்கள் பகுதியில் மின் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.
- முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.
- தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் சசிகலா (36). இவர் சென்னிமலை மண்டல பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுச்செயளாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் சகிகலாவுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வசித்து அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார் கார்மெட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஈங்கூர் மெயின் ரோட்டில் ஈங்கூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.
அப்போது தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.
இது குறித்து சசிகலா அண்ணன் ஜோசப் ராஜப்பா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.42 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1,214 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 2,778 கனஅடி நீராக அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.42 அடியாக உயர்ந்து உள்ளது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.
- இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் குட்டம் பட்டியை சேர்ந்தவர் ஊர் ஊராக சென்று குறி ஜோசியம் பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருமாள் சிறுவலூர் கொளப்பலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்
அப்போது கெட்டி சேவி யூரைச் சேர்ந்த சந்திரசேகரன் வயது 48 என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.
இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பெருமாளுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார்
- தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
- கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை நிலையம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
கடந்த சில நாட்களாக தரமான மஞ்சள் வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-
கடந்த வாரம் மஞ்சள் விலை குவிண்டால் 9,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மேலும் 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விரலி மஞ்சள் 6,206 முதல் 9,589 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 6,089 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.
ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் தரமான பெருவட்டு மஞ்சள் ஒரு குவிண்டால் 10,286 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
மஹராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்து காணப்படுகிறது.
இதனால் தற்போது மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் வரத்து அங்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதிய பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் மஞ்சள் நடவும் குறைந்துள்ளது.
ஓராண்டு பயிராக மஞ்சள் இருப்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
தவிர 'என்.சி.டெக்ஸ்' ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆகஸ்ட் மாத டெலிவரி விலை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டது.
தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
தேசிய அளவில் அனைத்து பகுதியிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் வடமாநில தேவைகளுக்காக ஈரோடு மார்க்கெட்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.
மஹராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு முழுமையாக தெரியும் வரை எதிர்ப்பு அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் கூடுதல் விலையுடன் அதிகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, பணமடலிசத்திரம் அடுத்த ஆராய்ச்சி பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிப்பாண்டி மகன் மாரிமுத்து 36. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
மாரிமுத்து சில மாதங்க ளாக மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் ஒன்றில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை பாசூர் ரோட்டில் இருந்து எழுமாத்தூர் நோக்கி அதே ஊரை ச் சேர்ந்த பொன்னு சாமி என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
பொன்னுசாமி இருசக்கர வாகனத்தை ஓட்ட மாரிமுத்து பின்னால் அமர்ந்து கொண்டு அதி வேகமாக வந்த பொழுது, எழுமாத்தூர் பொன்காளி யம்மன் கோயில் அருகே நிலைத்தடுமாறி சாலை யோரம் இருந்த கல் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த மாரிமுத்து தலையில் பலத்த அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னு சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து உறவின ர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
- அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






