search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students who won"

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

    பேச்சுப்போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கலைச்செல்வன், கருப்பு சாமி, பட்டதாரி ஆசிரியர் ஷீலாதேவி ஆகியோர் நடுவர்களாகவும், கட்டுரை போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரி தேவி ஆகியோர் நடுவர்களாகவும் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெஜினா ள்மேரி ஒருங்கிணை ப்பாளராகச் செயல்பட்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஆகாஷ் முதல்பரிசு ரூ.10,000-ம், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் மைந்தன்குமார் 2-ம் பரிசு ரூ.7,000-ம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவி நித்யாஸ்ரீ 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றனர்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ர.விஷால் முதல்பரிசு ரூ.10,000-ம், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா 2-ம் பரிசு ரூ.7,000-ம், பட்டிமணி யக்காரன் பாளையம் அரசு மாதிரிப்பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றுள்ளனர்.

    ×