என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக நடை பாதையில்"

    • மேம்பாலங்கள் போல் தற்காலிக நடைபாதை அமைத்து கடைகளை நடத்தி வருகின்றார்கள்.
    • சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் திங்கட்கிழமை தோறும் காய்கறி சந்தை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை நடைபெறும். இதனை வாங்குவதற்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து வாரச் சந்தை வளாகம் எல்லை வரை மழைநீர் வடிகால் பணி நடக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே போடப்பட்டு ள்ளது.

    இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் ஆங்காங்கே கடை வைத்திருப்பவர்கள் மேம்பாலங்கள் போல் தற்காலிக நடைபாதை அமைத்து கடைகளை நடத்தி வருகின்றார்கள்.

    இதேபோல் வாரச்சந்தை வளாகத்தில் நுழைவதற்கும் நுழைவாயிலில் தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடக்க முடியாமல் சந்தைக்கு வரும் வயதான பெண்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார்.

    எனவே அரசு உடனடியாக இந்த பகுதிக்கு விரைவில் மழை நீர் வடிகால் அமைத்து தரவேண்டும் என்று அந்தியூர் பகுதி பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×