search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steps are being taken"

    • 2 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள்பபட்டு வருகின்றது.
    • 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் பழைய தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

    முகாமில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்ப டும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்பகுதி விவசாயம் தொழில் சார்ந்த பகுதியாகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புகூட்டுப்பொருட்களாக விற்பனை செய்யும்போது வருவாய் அதிகமாகும்.

    மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பின ர்களும் விவசா யம் சார்ந்த பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

    மேலும் தாளவாடி பகுதியைச் சார்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட ப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி இங்குள்ள மாணவர்களின் நலனுக்காக உயர்க்கல்வியினை பெறும் வகையில் அரசுக்கலை க்கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கலைக்கல்லூ ரிக்கான கட்டுமான ப்பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் பணிகள் முடிவடைந்து அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் இயங்கும்.

    பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியில் 2 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள்பபட்டு வருகின்றது.

    மேலும் தாளவாடி அரசு மருத்துவமனையில் உயர்ரக நவீன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே மையம் அமைக்க ப்பட்டு வருகின்றது மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றது.

    இன்று நடைபெறும் மனுநீதி முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, வே ளாண்மை உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்க லைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.50.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்து வத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்தி ட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.

    முன்னதாக இம்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சிறுதானியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக பள்ளி மாணவியர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன்,

    மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பழனிவேல், துணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் ,செயற்பொறி யாளர் (வேளாண்மை பொறியியல் துறை) விஸ்வ நாதன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி,

    உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை) ராதிகா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை,

    தாளவாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரத்தினம்மா, தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் தாட்சாயினி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×