என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nursing room for"

    • குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.
    • தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையத்தில் தாய்மார்க ளுக்காக திறக்கப்பட்ட பாலூட்டும் அறை பயன்பா ட்டில் இல்லாமல் சில மாதங்களாக பூட்டியே கிடந்தது.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன் பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இது தொடர்பான செய்தி கடந்த ஒரு வாரத்தி ற்கு முன்பு மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.

    அதைத்தொடர்ந்து செய்தி எதிரொலியாக உடனடியாக நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையம் வந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து நகராட்சிக்கு ட்பட்ட தினசரி மார்க்கெட் மற்றும் பல பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு சமூக ஆர்வல ர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.

    ×