என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers gathered"

    • நெடுஞ்சா லை விரிவு படுத்துவதை காரணம் கூறி எங்களை அந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு மாற்றினர்.
    • வீரப்பன் சத்திரம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஈரோடு ஆர்.என்.புதூர், சூரியம்பா ளையம், அன்னை தெரசா நகர், 68 ஏ மாயவரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் முதலில் பவானி - ஈரோடு சாலையில் குடியிருந்தோம். நெடுஞ்சா லை விரிவு படுத்துவதை காரணம் கூறி எங்களை அந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு மாற்றினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம்.

    நாங்கள் குடியிருக்கும் பகுதியில் எங்களுக்கு பட்டா இல்லை. பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை பட்டா கிடைக்க வில்லை.

    மேலும் எங்கள் பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி இல்லை.

    இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மின்சார வசதி செய்து தரக் கோரி மின்வாரியத்திடம் கேட்டால் பட்டா இல்லாத இடத்தில் மின் வசதி செய்து தர முடியாது என்று கூறி வருகின்றனர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக எங்களது குழந்தைகள் மண் எண்ணை விளக்கில் படித்து வருகின்றனர்.

    மேலும் முறையான சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சிலர் நாங்கள் குடியிருக்கும் பகுதியை காலி செய்ய சொல்லி மிரட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கி, மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கேட்டுக்கொ ள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.

    இதேப்போல் வீரப்பன் சத்திரம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,400 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தில் ஒரு பகுதி சிதலமடைந்ததன் காரணமாக அந்தக் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

    நாங்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாங்கள் ஒன்று சேர்ந்து மாணவிகளுக்கு மூன்று கழிப்பிடம் கட்டிக் கொடுத்து உள்ளோம்.

    புதிய கட்டிடம் கட்டித் தந்தால் மாணவிகள் படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே இடித்து அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×