என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்"
- மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதல் அதிகரித்துள்ளது.
- செடியின் இலை நுனியில் பச்சையம் இழந்து, மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, சத்திய மங்கலம், கொடுமுடி ஆகிய பகுதிகளில் 1800 ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 5 முதல் 6 வயதுடைய மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான செடியின் இலை நுனியில் பச்சையம் இழந்து, மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இலை காய்ந்து உதிரும். மகசூல் பாதிக்கப்படும்.
எனவே செம்பேன் தாக்குதல் பயிரில் தென்பட்ட தும் ஒரு லிட்டர் நீரில் புரா ப்பர் ஜிட் 57 சதவீதம், இ.சி 2 மி.லி அல்லது பென்சாகுயின் 2 மி.லி அல்லது 0.80 மி.லி ஸ்பைரோ மெசிபைனுடன் 2 மி.லி டீப்பால் எனப்படும் ஒட்டும் திரவம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் செடியின் அனைத்து பாகங்களிலும் படும்படி காலை அல்லது மாலை தெளித்து செம்பேன் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






