யானை தாக்கி விவசாயி காயம்

புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது.இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.
யானை தாக்கி விவசாயி காயம்
Published on

சத்தியமங்கலம்:

ஆசனூர் அருகே உள்ள ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (37). பேக்கரி ஊழியர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது கிராமத்துக்கு சென்றார்.

அப்போது இருட்டில் புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஆசனூர் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் காயத்துடன் இருந்த பசுபதியை மீட்டு வனத்துறை ஜீப்பிலேயே சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com