search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு
    X

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு

    • அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது
    • 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

    ஈரோடு

    பொது இடங்களில் விளம்பர பேனர்களை வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து ள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவ னங்கள், மருத்துவ மனைகள், பொது இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள், ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

    இதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், ஒளிரும் விளக்குகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அதில் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்குப் பிறகும் அவற்றாவிட்டால் மாநகராட்சியின் மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×