என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி பாண்டியம்மாள் (வயது54). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    செங்குறிச்சி ஊராட்சி யில் துப்புரவு தொழி லாளியாக பணிபுரிந்து வருகிறார். அங்கு புதுப்பட்டி ஆலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (53) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பழனியம்மாள் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இதனால் இருவருக்கும் இைடயே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி பாண்டியம்மாளை கடுமையாக தாக்கினார்.

    இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவரை இன்று காைல திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

    மேலும் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
    • மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக இறந்து கிடந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை நல்லேந்திர புரத்தைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலித்தொழி லாளி.இவரது மகன் கவுதம புத்தர் (வயது 18). இவர் மனநலம் பாதிக்க ப்பட்டவர் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சுமார் மாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள 40 அடி ஆழமும், 30 அடி தண்ணீரும் உள்ள கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார். இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதன் பேரில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்கு மார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.

    இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அருண் நாரா யணன்,ஏட்டு கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் மாயமான கவுதம புத்தர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர்.
    • ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதமான சீதோசனமும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்களை கவரும் வண்ண மலர்களும் இருப்பதால் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைகாலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனை சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர். குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோடை விழா முடிந்தும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

    கோடை விழா முடிந்த பின்னரும் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • உசிலம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் கபில்க ண்ணன்(23). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்க ழகத்தில் பி.ஏ., 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே ஊரை சேர்ந்தவர் சத்யா மகன் கோபி(23). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வந்தார். கோவில் திருவிழாவிற்காக 2 பேரும் ராமநாதபுரம் வந்தனர்.

    நேற்று செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் தருமத்துப்பட்டி அருகே வந்தனர். அப்போது உசிலம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கபில்கண்ணன் மற்றும் கோபி ஆகியோர் உயிரி ழந்தனர். இதுகுறித்து போலீ சார் விசாரித்து வருகின்ற னர். கோவில் திருவிழாவிற்கு வந்த வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது.
    • சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.

    நத்தம்:

    நத்தம் அருகே ஊராளி பட்டியில் பொன் அய்யனார்,கருப்பசாமி, சிய்யப்பார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதில் கடந்த 31-ம் தேதி பொங்கல்குடை பொன் அய்யனார் கோவி லுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தலும், பின்னர் இரவு கருப்பசாமி மின் அலங்காரத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது. பின்னர் சிய்யப்பார் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகமும், தீபாராதனை களும் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலையில் சிய்யப்பார்சாமி உள்ளிட்ட சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடு களை ஊராளிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர். மழைவேண்டி திரு விழா நடத்தப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்த னர்.

    • மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • 2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சி மலைப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆண்டியம்மாள் (34). இவர்களுக்கு முறையே 9,7,5 வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 4வது முறையாக கருவுற்ற ஆண்டியம்மாள் கடந்த வாரம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

    அவரது குழந்தை பிறப்பு குறித்த விவரம் அறிந்த திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆண்டியம்மாளை கருத்தடை செய்து கொள்ளுமாறு கூறினர். ஆனால் எங்கள் ஊரில் இதுபோன்ற பழக்கம் கிடையாது. எனவே நான் கருத்தடை செய்துகொள்ள மாட்டேன் என கூறினார். கூலி வேலை பார்க்கும் உனது கணவரால் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிப்பீர்கள்.

    மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆண்டியம்மாள் எங்கள் வாரிசாக ஆண்பிள்ளை பிறந்தவுடன் கருத்தடை செய்து கொள்கிறேன். அதுவரை கருத்தடை செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்தார். டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் அறிவுரை கூறியும், ஆண் குழந்தை பிறக்கும் வரை கருத்தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியாக கூறிவிட்டார்.

    இதுகுறித்து அவரது கணவரிடம் பேசியபோதும் அதே கருத்தை தெரிவித்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த மற்ற பெண்களும் ஆண்டியம்மாளிடம் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.

    2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம். இதன் காரணமாகவே தமிழக அரசு கருத்தடை அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புற பெண்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பயம் மற்றும் அறியாமை காரணமாக கருத்தடைக்கு மறுத்து வருகின்றனர். மேலும் ஆண் குழந்தைதான் குடும்ப வாரிசு என்று நினைக்கின்றனர். இதுபோன்ற சிந்தனை மாறவேண்டும். எந்த குழந்தையாக இருந்தாலும் தங்களால் வளர்த்து சாதனையாளராக்க முடியும் என்ற எண்ணம் வளரவேண்டும் என்றனர்.

    • கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்ல உள்ளார்.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான நடவடிக்கையில் தீவிர பணியாற்றி வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் மாநாடு நடத்தி அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன்று என்று சூளுரைத்தார். அடுத்தகட்டமாக சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக அறிவித்தார்.

    ஆனால் டி.டி.வி. தினகரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. இதனிடையே ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அடையாறில் டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    அதனைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் மகன் திருமணம் வருகிற 7-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்று அவரது ஆதரவாளர் தெரிவித்தார்.

    வைத்திலிங்கத்தின் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிப்பாக வருவார் என்பதால் திருமண விழாவிலேயே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் சென்னை செல்ல உள்ளார். அங்கிருந்து 7-ந் தேதி தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    திருமண விழாவைத் தொடர்ந்து சசிகலாவுடன் இணைந்து கட்சி பணியில் ஈடுபடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    • வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
    • முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறு தல், முதியோர் உதவி த்தொகை, குடும்பக்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அதிகாரி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணனிடம் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அறிவிப்பு செய்வதை கண்டித்தும், சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெறும் வரை வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.

    இதனை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார். அப்போது நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது.

    அப்போது திருமணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மணமேடை முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.
    • மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஞானசேகரனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தபோதும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன விரக்தியில் இருந்த ஞானசேகரன் விஷம் குடித்து மயங்கினார்.

    அவரது உறவினர்கள் அவரை மீட்டு கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×