என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.
    • நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிபட்டியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு பங்கேற்ற வினோத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

    இந்த கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது.ஆனால் பெரிய அளவில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களின் இடையில் அரிவாள் மற்றும் வேல் கம்புகள் உள்ளது.இதையே தெய்வமாக நினைத்து இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள். இந்தப் பாரம்பரிய திருவிழாவை ஒட்டி தலையாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இங்கு குவிந்தனர்.அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் முன்பு ஆடுகள் பலியிடப்பட்டன.தொடர்ந்து பெரிய அண்டாக்களில் சாப்பாடு கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் ஆண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தனர்.பின்னர் அவர்களுக்கு வாழை இலையில் சாப்பாடு, கறி குழம்பு பரிமாறப்பட்டது.விடிய விடிய இந்த கறி விருந்து நடைபெற்றது.இதில் தலையாரிபட்டி,ராமராஜபுரம்,பாறைப்பட்டி, ஜோத்தாம்பட்டி,வடுகபட்டி, பூவகிழவன்பட்டி, மணியக்காரன்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, ஏழு கொட்டம், 4 கொட்டம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் பெரியோர்கள் என ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு கமகம கறி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, எங்கள் முன்னோர்கள் கிராமங்களில் நல்ல மழை பெய்திடவும்,நோய் நொடி இல்லாமல் கிராம மக்கள் நிம்மதியாக வாழவும், இந்த வழிபாட்டை நடத்தி வந்தனர். இந்த விழாவை நாங்களும் ஒன்று சேர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்துகிறோம். இந்த கறி விருந்து வெளியில் பெண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அருகிலேயே ஒரு பெரிய குழி தோண்டி மீதம் இருக்கக்கூடிய சாப்பாடு மற்றும் இலைகளை குழியில் புதைத்து விடுவோம் என்றனர்.

    • விசாரணையில் அவரது பட்டறையில் வேலைபார்த்த 2பேர்தான் அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.
    • பகை காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பெத்தய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகுபாண்டி (25). இவர் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வந்தார். நேற்றுமாலை முருகபவனம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் பயங்கர ஆயுதங்களால் அழகுபாண்டியை தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அழகுபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சோதனை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவரது பட்டறையில் வேலைபார்த்த எம்.குரும்பபட்டியை சேர்ந்த 2பேர்தான் அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    அழகுபாண்டி ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றவர். அந்த பகை காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர்.
    • போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

    விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார். வெங்காயத்தில் முதலீடு செய்தால் எந்த காலத்திலும் நஷ்டம் கிடையாது என தெரிவித்ததோடு 30 சதவீதம் அதிகமாக பணத்தை திருப்பி தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

    இதனை நம்பி சென்னை வளசரவாக்கம் தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (40), சூர்யாவை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் செலுத்தினார்.

    இதேபோல் திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் கூறியபடி பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.

    இதுகுறித்து சென்னை சந்திரசேகர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சூர்யாவை கைது செய்தனர்.

    • சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானம் வாங்க சென்ற குடிமகன் கூடுதலாக ரூ.10 கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை வரும்போது தருகிறேன் என கூறி உள்ளார்.

    ஆனால் ரூ.130 மதுபான பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்தால்தான் சரக்கு கிடைக்கும் என்றும், இல்லையெனில் தர முடியாது எனவும் டாஸ்மாக் ஊழியர் கூறினார். எதற்காக ரூ.10 கூடுதலாக கேட்கிறாய் என கேட்டதற்கு ஒரு சில அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் ரூ.10 கூடுதலாக வாங்குகிறோம்.

    அனைத்து அதிகாரிகளுமே பணம் வாங்குகின்றனர். யார்? யார்? பணம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை நான் உனக்கு விளக்கமாக வெளியில் வந்து சொல்கிறேன் என கூறினார். அவர் பேசிய இந்த உரையாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • சிகிச்சை பலனின்றி சபீர் ராஜா உயிரிழந்தார்.
    • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா (வயது 60). இவரது தம்பி சபீர்ராஜா (58). இவர்கள் 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

    கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் வியாபாரம் செய்து வந்தனர். இருவருக்கும் இடையே கடைக்கு செல்லும் பொது நடைபாதை யாருக்கு சொந்தம் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் பயாஸ் ராஜா தனக்கு சொந்தமான ஒரு பகுதியை இரும்பு வேலியால் அடைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சபீர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது கடை முன்பு நின்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சபீர் ராஜா உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராம்பிரபாகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் ராம் பிரபாகர் (வயது 50). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்பவருடன் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு செல்வதற்காக திண்டுக்கல்லுக்கு காரில் வந்துள்ளனர். அப்போது திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

    அப்போது ராம்பிரபாகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று விவசாயிகள் கடை அமை க்காமல் உழவர் சந்தை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் உயர்மட்டக்குகுழு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தெரிவிக்கையில், உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களு க்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டு ள்ளது.

    மேலும் உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே உழவர் சந்தை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களை அகற்ற வேண்டும். அது வரை தாங்கள் கடைகளை திறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இது குறித்து ஓரிரு நாளில் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் உறுதிமொழியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இருண்ட நேரத்தில் ராணி மாட்டிற்கு புல் அறுப்பதற்காக அவரது தோட்டத்திற்கு சென்றார்
    • வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கூலித் தொழிலாளி.இவரது மனைவி அல்லிராணி (வயது 35).இவர்கள் கால்நடைகளை வளர்த்து தொழில் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இருண்டது. அந்த நேரத்தில் ராணி மாட்டிற்கு புல் அறுப்பதற்காக அவரது தோட்டத்திற்கு சென்றார்.புல்கட்டை தலையில் தூக்கி சுமந்தபடி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென அல்லிராணி மீது மின்னல் தாக்கியது.இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகி ன்ற நிலையில் மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார்

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது37). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் சின்னாளபட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோ ட்டையில் பாண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த கணேசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார். இதுகுறித்து நிலக்கோ ட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெ க்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • மேல்ப ள்ளம், ஏலக்காய் வளைவு உள்ளிட்ட இடங்களில் 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் முறிந்து கிடந்த மரங்களை போராடி அகற்றினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை சூறைக்காற்று டன் திடீரென கன மழை பெய்தது.

    இதனால் வெள்ள ப்பாறை, பி.எல்.செட், சவரிக்காடு, ஏலக்காய் வளைவு, மேல்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசியது. கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மேல்ப ள்ளம், ஏலக்காய் வளைவு உள்ளிட்ட இடங்களில் 3 மரங்கள் முறிந்து சாலையில் விழு ந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். மாலையில் அவர்கள் ஊர் திரும்பியபோது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சா லைத்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் முறிந்து கிடந்த மரங்களை போராடி அகற்றினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

    • வாகனத்திற்கு யாரேனும் தீ வைத்து சென்று விட்டனரா அல்லது வேறு ஏதும் குற்ற சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
    • இரவு திடீரென பைக் தீப்பிடித்ததாகவும், பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணை த்துவிட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதாக வும் தெரியவந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருசக்கர வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசா ரணையில் ஈடுபட்டனர். வாகனத்திற்கு யாரேனும் தீ வைத்து சென்று விட்டனரா அல்லது வேறு ஏதும் குற்ற சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இரவு திடீரென பைக் தீப்பிடித்ததாகவும், பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணை த்துவிட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதாக வும் தெரியவந்தது.

    இருப்பினும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் போலீ சார் அவரை எச்சரித்தனர். சாலை ஓரம் இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×