என் மலர்
நீங்கள் தேடியது "WOMAN KILLED BY LIGHTNING"
- மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இருண்ட நேரத்தில் ராணி மாட்டிற்கு புல் அறுப்பதற்காக அவரது தோட்டத்திற்கு சென்றார்
- வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கூலித் தொழிலாளி.இவரது மனைவி அல்லிராணி (வயது 35).இவர்கள் கால்நடைகளை வளர்த்து தொழில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இருண்டது. அந்த நேரத்தில் ராணி மாட்டிற்கு புல் அறுப்பதற்காக அவரது தோட்டத்திற்கு சென்றார்.புல்கட்டை தலையில் தூக்கி சுமந்தபடி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென அல்லிராணி மீது மின்னல் தாக்கியது.இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்னல் தாக்கி இளம் பெண் பலியானார்
- வயலுக்கு சென்ற போது பரிதாபம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி பிரதகம்பாள்புறத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணு மகள் பிரியங்கா ( வயது 26) பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் பிரியங்கா அலறியுள்ளார். இவரின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், பிரியங்காவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






