என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
நிலக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவர் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகி ன்ற நிலையில் மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
- படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார்
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது37). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் சின்னாளபட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோ ட்டையில் பாண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த கணேசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார். இதுகுறித்து நிலக்கோ ட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெ க்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.






