என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆவடி டிரைவர் மூச்சு திணறலால் மரணம்
- ராம்பிரபாகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குள்ளனம்பட்டி:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் ராம் பிரபாகர் (வயது 50). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்பவருடன் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு செல்வதற்காக திண்டுக்கல்லுக்கு காரில் வந்துள்ளனர். அப்போது திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
அப்போது ராம்பிரபாகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






