கொடைக்கானலில் குடி பழக்கத்தால் புதுமாப்பிள்ளை தற்கொலை

தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஞானசேகரனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தபோதும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன விரக்தியில் இருந்த ஞானசேகரன் விஷம் குடித்து மயங்கினார்.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com