search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to protest"

    • வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
    • முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறு தல், முதியோர் உதவி த்தொகை, குடும்பக்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அதிகாரி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணனிடம் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அறிவிப்பு செய்வதை கண்டித்தும், சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெறும் வரை வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.

    இதனை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார். அப்போது நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    ×