திண்டுக்கல் அருகே பெண் துப்புரவு தொழிலாளி மீது கொடூர தாக்குதல் - கள்ளக்காதலன் வெறிச்செயல்

கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி பாண்டியம்மாள் (வயது54). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

செங்குறிச்சி ஊராட்சி யில் துப்புரவு தொழி லாளியாக பணிபுரிந்து வருகிறார். அங்கு புதுப்பட்டி ஆலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (53) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பழனியம்மாள் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் இருவருக்கும் இைடயே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி பாண்டியம்மாளை கடுமையாக தாக்கினார்.

இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவரை இன்று காைல திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

மேலும் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com