என் மலர்
கடலூர்
- கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது.
- படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்ச விழா கடந்த 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. முன்னதாக விழாவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் இரவில் கோவிலில் இருந்து அங்காளம்மன், அய்யனார், முத்தாலம்மன், முருகன், உள்ளிட்ட சாமிகள் 4 வாகனங்களில் ஊரை சுற்றி வலம்வரும் வீதிஉலா நடக்கும்.
அதேபோல் நேற்று இரவு கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது. இதில் கோவில் நடுத்தெருவில் இருந்து வீதிஉலா தொடங்கி 3 சாமிகள் தேர்களில் வடக்கு தெரு பகுதிக்கு வந்தன. கடைசியாக 4 வதாக வந்த தேர் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 17) உடல் கருகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் வேல்முருகன் மகன் திருமுருகன், ஜானகிராமன் மகன் ராஜேஷ் ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேரில் மின்சாரம் தாக்கி இறந்த கோகுல கிருஷ்ணணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற இருந்த நிலையில் நேற்று நடந்த வீதிஉலா நிகழ்ச்சியில் தேரில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது .
- ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையான புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் செடல் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மாலை இரு வேளையும் அம்மன் வீதி உலா நடந்தது. இரவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று காலை செடல் உற்சவம் தொடங்கியது . இைதயொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற செடல் அணிந்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர். குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ெசடல் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செடல் அணிந்து கொள்வதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் செடல் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மாவிளக்கு எடுத்து அம்மைன வழிபாடு செய்தனர். ெசடல் திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே 100-க்கும்மேற்பட்ட திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரை உற்சவம் நடைபெறும். குறிஞ்சிப்பாடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார் அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
- மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
- விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் மணியரசி (வயது 27), இவர் புலியூர்காட்டு சாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணிபுரந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புலியூர் காட்டு சாகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சிறு தொண்டைமாதேவி அருகே வந்து கொண்டிருந்தபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின்படி பெண் டாக்டரிடமிருந்து செயினை பறித்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். இவர் நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த விக்கி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர். தாலி செயின் பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தி லேயே கொள்ளையனை கண்டறிந்த பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.
- என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் பாலக்கரையில் தே.மு.சார்பில் தமிழக அரசை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தி.மு.க.அரசு மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, பின்னர் குறிப்பிட்ட தகுதியுடைய மகளிருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்குவது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது போல் ஆகும். விளைநிலங்களை அழித்து வாய்க்கால் அமைத்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்த அவர், பரவனாறு வாய்க்காலை சீரமைக்கிறோம் எனக் கூறி ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி.யின் செயலை இதோடு நிறுத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும், தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். மேலும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த பிரேமலதா, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடவில்லையென்றால் தே.மு.தி.க மற்றும் விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜான கிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பண்ருட்டி புருசோத்தமன்,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பண்ருட்டி வசந்தன், மாவட்ட துணை செயலாளர் வேல் முருகன், நகர தலைவர் சங்கர், நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜ் குமார், நகர பொருளாளர், நகர் மன்ற உறுப்பினர் கருணா,நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமசந்திரன், டெய்லர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர்.
- சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கடலூர்:
நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை வடலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சனை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது .இதன் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக நெய்வேலி அண்ணா திடலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட போரா ட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அமையும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி தெரிவித்தார்.
- விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
- போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர்:
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
- மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் நடந்த தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவு முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உணவை சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மகளிர் போலீசார் விசாரணை
- பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
கடலூர்:
கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சேர்ந்த விக்னேஷ் (வயது 32) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர்.
- மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்தது .
கடலூர்:
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பஸ் சென்றது. கடலூர் அடுத்த செம்மங்குப்பம் பகுதிக்கு பஸ் வந்தபோது சாலையின் ஒருபுறத்தில் நேற்று பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர். இதனால் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். மேலும் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாகவும், சாலை ஓரத்தில் மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்து எப்போது விழும் என்று தெரியாத வகையில் இருந்தது.
கடலூர் - சிதம்பரம் சாலை 24 மணி நேரமும் அதிக அளவில் வாகனங்கள் செல்லும் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யமுடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
விழுப்புரம் - நாகப்பட்டினம் வழியாக 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியும், சாலைகள் முழுவதும் பெயர்த்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளானமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாலும், தொடர் மழை காரணமாக இந்த வழியில் செல்லும் வாகனங்கள் அதிகமாக விபத்துகுள்ளாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.
- கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது.
- மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.
கடலூர்:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவந்தது.
இதற்கிடையே ஒருபுறம் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ,குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி, வடலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதும் பல்வேறு பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதையும் காண முடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு- பரங்கிப்பேட்டை - 102.4, லக்கூர் - 101.0, தொழுதூர் - 95.0, பெல்லாந்துறை - 73.0,குறிஞ்சிப்பாடி - 68.0,சிதம்பரம் - 67.0,ஸ்ரீமுஷ்ணம் - 57.3,கீழ்செருவாய் - 50.0, அண்ணாமலைநகர் - 49.2,புவனகிரி - 49.0, வேப்பூர் - 47.0, சேத்தியாதோப்பு - 43.4 காட்டுமயிலூர் - 40.0,காட்டுமன்னார்கோவில் - 34.0, லால்பேட்டை - 28.0, வடக்குத்து - 28.0, கொத்தவாச்சேரி - 22.0,மீ-மாத்தூர் - 16.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.0, விருத்தாசலம் - 10.0, பண்ருட்டி - 10.0,வானமாதேவி - 10.0, குப்பநத்தம் - 9.4 எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 9.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் - 1042.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
- தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
- சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் மோரை மேட்டு தெரு சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், 2சிறு வயதுகுழந்தைகளும் உள்ளனர். நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் பெயிண்டிங் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, அவரது உறவினர்கள், கவுன்சிலர் முத்தமிழன் உள்ளிட்ட பலர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். இத் தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்த மணிகண்டன் மனைவி மற்றும் உறவினர்கள் தனியார் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணிகண்டன் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை
- தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கடலூர்:
எழுத்தூர், பெருமுளை பகுதிகளில் முறையாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு நடைபெறும் ராஜூவ்காந்தி ஊராக 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை எனவும், எழுத்தூர் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வறுமை கோடு சான்றிதழ் வழங்காமல் மாடி வீடு, சொத்துக்கள் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள்.
குறிப்பாக 100 நாள் வேலையில் தலைவர், செயலாளர், வார்டு நபர் உள்ளிட்டோர் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு வேலை கொடுத்து மற்றவர்களுக்கு முறையாக வேலை வழங்காததை கண்டித்து எழுத்தூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு முறையாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதின்பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதேபோன்று திட்டக்குடி அடுத்த பெருமுளை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடந்து வருகிறது. இதில் பணியாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது 6-வது வார்டு பொதுமக்கள் வேலை செய்யும் நாட்களில் 1-வது வார்டு பொதுமக்களுக்கு வேலை வழங்கியதால் 6-வது வார்டு பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிகுமாரை இன்று காலை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் அனைத்து வார்டில் உள்ள அனைவருக்கும் வேறுபாடு இன்றி முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனவும். ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவேண்டும். அலுவலகத்தில் வைத்து தான் அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், பெருமுளை ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டி யலில் பெரும் முறைகேடு கள் நடந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிக்குமாரை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு நபர் இருவரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விரைவில் இந்த கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் மங்களூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர்.






