திட்டக்குடி அருகே நள்ளிரவில் இடிந்து விழுந்த கூரை வீட்டின் மதில்சுவர்

பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நள்ளிரவில் இடிந்து விழுந்த கூரை வீட்டின் மதில்சுவர்
நள்ளிரவில் இடிந்து விழுந்த கூரை வீட்டின் மதில்சுவர்
Published on

கடலூர்:

திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட தர்மகுடிக்காடு கிராமத்து சாலையோரம் சில கூரை வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதில் பெரியசாமி (வயது 75) என்பவர் அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கூரை வீட்டின் 2 பக்க மதில் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாரும் காயம் இன்றி உயிர் தப்பினர். கடந்த 2 தினங்களாக திட்டக்குடி பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்வதால், சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com