என் மலர்
நீங்கள் தேடியது "5.70 லட்சம் விண்ணப்பங்கள்"
- முகாம் கடலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் கடலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக 859 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 3,65,747 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக 557 முகாம்களில் 5.08.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்த 2-ம் கட்ட முகாமில் இதுவரை 2,04,426 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், 15.08.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு 2-ம் கட்ட முகாம்களின் இறுதி 2 நாட்களான 15.8.2023 மற்றும் 16.8.2023 நடைபெறும் 2-ம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவ ர்களின் விண்ணப்பபதிவு செய்யும் நிகழ்வை 19.8.2023 மற்றும் 20.8.2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. விடுபட்டவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். முதல் கட்ட மற்றும் 2-ம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்ப ங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ள ப்படும். அப்போது விண்ணப்ப தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






