திட்டக்குடி அருகே கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசு மாடு சாவு

மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர். அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது.
திட்டக்குடி அருகே  கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசு மாடு சாவு
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமங்கலம் கிராம த்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் விவசாய வேலை செய்து வருகி றார். இவர் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று விட்டுள்ளார். மீண்டும் மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமங்கலம் சுடுகாட்டின் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக மின்கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது. இதை பார்த்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் ஆனவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com