என் மலர்
கடலூர்
பண்ருட்டியில் உள்ள கடலூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் செட்டிபட்டறை ஏரி அமைந்துள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் மேடான பகுதியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 24-ந் தேதிக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் இடங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து செட்டிபட்டறை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள், ஏரியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகள் இடிக்கப்படும்.எனவே வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்று அங்கு வசிக்கும் மக்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை.
இதையடுத்து இன்று காலை பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் அதிகாரிகள் செட்டிபட்டறைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை கேட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து 3 பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதை பார்த்து பெண்கள் கதறி அழுதனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு கடந்த 3 மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே போல பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் காலிகுடத்துடன் கடலூர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-
பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் குழாய் உடைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் குடிநீர் பிரச்சினையை தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் டாக்டர்கள் புலிகேசி சாமிநாதன் சசிகுமார் ஸ்ரீதரன் உள்பட 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி 30 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து ஆக்கிரமித்து வீடு கட்டிருந்த பொது மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று திட்டக்குடி தாசில்தார் சத்தியன் தலைமையிலான அதிகாரிகள் வைத்தியநாதசாமி கோவில் குளம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் உங்களுக்கு காலஅவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யவில்லை. எனவே, இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும். உங்கள் பொருட்களை எல்லாம் எடுத்துச்செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). இவரது நண்பர் சிவசங்கர் (17). இவர்கள் 2 பேரும் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று விக்னேசும், சிவசங்கரும் கல்லூரிக்கு செல்வதற்காக கருக்கையில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அதே பஸ்சில் கருக்கை காலனி பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ் (17), சூர்யா (17), ராமச்சந்திரன் (17) ஆகிய 2 பேரும் வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரவின் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து விக்னேஷ் மற்றும் சிவசங்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாளிகைபட்டு ரைஸ்மில் அருகே பஸ் நின்றபோது விக்னேசையும், சிவசங்கரையும் கீழே இறக்கி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த விக்னேசையும், சிவசங்கரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பிரவின் ராஜ், சூர்யா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கருக்கை பகுதியை சேர்ந்த பரம நாதன் (18), பார்த்திபன் (17) உள்பட 3 பேர் சேர்ந்து பிரவின்ராஜை தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் கருக்கை பகுதியை சேர்ந்த விக்னேசையும், சிவசங்கரையும் தாக்கினோம் என கூறினார்.
இதைத்தெதாடர்ந்து பிரவின்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பரமநாதன், பார்த்திபன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பரமநாதனையும், பார்த்திபனையும் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர்தெரு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26), தொழிலாளி. இவரது மனைவி காயத்திரி (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மோகன்ராஜ் தனது மனைவி காயத்திரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று இரவு மோகன்ராஜின் வீட்டிற்கு பின்புறம் உள்ள மூங்கில் மரத்தில் சேலையில் தூக்கு போட்ட நிலையில் காயத்திரி பிணமாக தொங்கினார்.
இதை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் மோகன் ராஜிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் புவனகிரியில் உள்ள காயத்திரியின் தந்தை ஜோஸ்மெல் கேபிரியலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாள் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே மோகன்ராஜ் வீட்டுக்கு வந்து காயத்திரியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மந்தாரக்குப்பம் போலீசில் காயத்திரியின் தந்தை ஜோஸ்மெல்கேபிரியல் புகார் செய்தார். புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 வருடத்தில் காயத்திரி இறந்திருப்பதால் குறிஞ்சிப்பாடி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதனால் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மேலக்குண்டலப்பாடி, அக்கரைஜெயங்கொண்ட பட்டினம், மரத்தான்தோப்பு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கடந்த 6 நாட்களாக இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று கீழணையில் இருந்து 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்களை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து படகுகள் மூலம் அவர்களை மீட்டனர். 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாகவும், 5 ஆயிரம் வீடுகள் பாதியளவும் தண்ணீரால் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தன.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் பலர் தங்களது வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
பெரம்பட்டு பகுதியில் பல்நோக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு பொருட்கள் வழங்கினர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
கீழணையில் இருந்து முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று தண்ணீரை அதிகளவு திறந்து விடுகிறார்கள். இதனால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எப்போது என்ன நடக்கும் என்ற அசத்திலேயே நாங்கள் உள்ளோம்.
எங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குகிறார்கள். நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மை நீர் ஆதாரமாக திகழ்கிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அங்கிருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவில் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று குறைந்து 45.50 அடியாக உள்ளது.
வீராணம் ஏரியின் கரைகள் உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரியின் கரைகளின் பாதுகாப்பு கருதியும், தற்போது விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை இல்லை என்பதாலும் ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.
வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 972 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
சிதம்பரம்:
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர கிராமங்களான திட்டுக்காட்டூர், பெரம்பட்டு, கீழகுண்டலபாடி உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வீடுகளை இழந்த பலர் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையங்களிலும், அரசு பள்ளி மற்றும் கோவில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கீழகுண்டலபாடியை சேர்ந்த செல்வ ராணி (வயது 22) என்பவர் வீடும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படுவது எங்கள் கிராமம் தான். எங்கள் கிராமத்தில் பலர் விவசாயம் செய்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தும், உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் சொந்த கிராமத்திலேயே அகதியைப்போல் வாழ்கிறோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் கிராமத்தில் புகுந்து விடாமல் தடுக்க கரையை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளத்தில் வீடு இழந்த ஜெயந்தி(45) என்பவர் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் எனது வீடு சேதம் அடைந்துள்ளது. இதனால் நான், என் கணவர் மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவிக்கிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 5 நாட்களாக எங்கள் கிராமத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளை இழந்து பலர் தவிக்கிறார்கள். சொந்த கிராமத்திலேயே உணவு, தண்ணீர் கிடைக்காமல் அகதிப்போல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக சரிவர உணவு கிடைக்கவில்லை. அதேபோல் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ளநீரை காய்ச்சி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் தொற்றுநோய் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.
வருங்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






