search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cudalore furious sea"

    கடலூரில் கடல் சீற்றம் காணப்பட்டதால் மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
    கடலூர்:

    கடலூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைபெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. என்றாலும் காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது. இதுதவிர கடல் சீற்றமாக காணப்பட்டது. 

    கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுது போக்கு இடமான தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலைகள் கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது. இதனால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கரையில் இருந்து சற்று தொலைவில் நின்றபடியே வங்கக்கடலின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். 

    வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடல் சீற்றம் காணப்பட்டதாகவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×