என் மலர்tooltip icon

    கடலூர்

    • வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம்.
    • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர்.

    கடலூர்:

    நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டில் பொறி, அவல் கடலை, பழ வகைகள் போன்றவற்றை வைத்து படைத்தும், வாகனங்களில் வாழை மரங்கள் கட்டி கோவிலுக்கு சென்று வாக னங்களை படைத்தும், வீட்டில் படைத்தும் மற்றும் வணிக நிறுவனங்கள் கடை களில் வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த நிலையில் கடலூர் பகுதிகளில் நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதச மியை முன்னிட்டு டன் கணக்கில் ஆயிரக்கணக் கான வாழைத்தார்கள் குவிந்து உள்ளது.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர். இதில் 150 முதல் 300 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடலூருக்கு வழக்கமாக 2 டன் வாழைத் தார்கள் வந்த நிலையில் விழாக்காலம் என்பதால் 4 டன் வரை தற்போது வாைழத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் நாளை ஆயுத பூஜை என்பதால் வாழ்த்தார்கள் அதிகளவில் வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார். 

    • அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
    • இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த விஜய் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தர வின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) என்பது தெரிய வந்தது. இவர் 4 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை யொட்டி வழக்கு பதிவுசெய்து சர்வேசை கைது செய்தனர்.

    • இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
    • தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கே.கே. நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த எலி மருந்தை மீனாட்சி திடீரென்று சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை தொடர்ந்து மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மீனாட்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் கடலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் வேலூரை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பம் அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டிவனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்தப்பட்ட வழக்கில் அபுதாகீரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பரிந்துரையின்படி கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் அபுதாகிர் என்கிற சையது அபுதாகிர் என்பவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபுதாகீரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர்.

    • கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
    • சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார்.

    கடலூர்:

    கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அறிவிக்கும் போனஸ் மற்றும் கருணை தொகையை அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். நியாய விலை கடை ஊழியர்களிடம் இருப்பு குறைவிற்கு 3 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் வேல்முருகன், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல், கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் மகாலட்சுமி (17). பிளஸ்-2மாணவி.இவர்நேற்றிரவு 8மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் மகாலட்சுமியின் தாய் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் பண்ரு ட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன மகாலட்சுமி விழுப்புரத்தை சேர்ந்த வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,
    • வசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ள 260 ஏக்கர் பரப்பில் இசா பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீராதாரமாக ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம், உள்ளிட்ட கிராமங்களின் மழை நீர் வடிகால் மூலமாக வரும். இதனால் நிரம்பும் ஏரியின் உபரி நீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரியின் மூலமாக, பெருமாள் ஏரி வழி சென்று கடலூர் கடலில் கலக்கும்,மழை காலங்களில் நிரம்பும் நீரைக் கொண்டு, மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,என்.எல்.சி.யில் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்பு, நீர் வரத்துக்கான வழிகள் தடைபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், நீர்வரத்துக்கான ஆதாரங்களாக மாறி, கோடைக்காலங்களில் விவசாயத்திற்கு ஆதாரமாகவும், மழைகாலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், ஓணான்குப்பம், திருவெண்ணை நல்லூர், பாதிரிமேடு, கல்குணம் விவசாய நிலங்கள் மூழ்கும் அபாய நிலை தொடர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிறுவனத்தின் மூலம் வெளியேற்றப்படும், தண்ணீர் இந்த ஏரியில் விடாததால், சம்பா பயிர்களையும், குருவை பயிர்களையும் முறையாக செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இயற்கையாக கிடைக்கும் மழைநீரால், ஏரி நிரம்ப வழியும் இல்லை, என்.எல்.சி. கழிவுகளால் ஏரியும் தூர்ந்து மேடாகிபோனது. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, இதனால் சம்பா நெல் பயிரிட்ட விவசாய நிலம் காய்ந்து கரம்பாக கிடக்கிறது, இதனால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். தூர்ந்து போன ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். ஏரிக்கு நீர் கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு 'தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக புயல் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கொள்ளை குறித்து கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் காமாட்சிப்பேட்டையில் ஊருக்கு வெளிப்புற பகுதியில் காளி கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது கோவில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் வந்தவுடன் கோவிலுக்குள் உள்ள மற்ற பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதில் கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன்னாலான பூங்கரகத்தை காணவில்லை. இது தொடர்பாக கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கோவிலுக்குள் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார், கோவிலுக்கு வரும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கோவில் பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • மக்களை தேடி மேயர் என்பதன் மூலம் மக்களி டம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகின்றனர்.
    • கடலூர் துறைமுகம் 34 முதல் 38 வது வார்டு வரையில் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட 45 வார்டுகளில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் மக்களை தேடி மேயர் என்பதன் மூலம் மக்களி டம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு வாங்கும் முகாம் கடலூர் துறைமுகம் 34 முதல் 38 வது வார்டு வரையில் நடைபெற்றது.

    இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை உடனுக்குடன் விரைந்து செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சுந்தரிராஜா உறுதி யளித்தார். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மண்டல குழு தலைவர் இளையராஜா, கவுன்சிலர் கவிதா ரகு ராமன், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 32). இவர் கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை சிகாமணி இவருக்கு டீ வாங்கி வருவதற்காக எதிரே உள்ள டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகனை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜசேகரை தேடி வருகிறார்.

    ×