search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு: 800 ரூபாய்க்கு குண்டு மல்லி விற்பனை
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கி செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு: 800 ரூபாய்க்கு குண்டு மல்லி விற்பனை

    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
    • மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    Next Story
    ×