மினி பஸ் டைமிங் தகராறு: பஞ்சாயத்து துணை தலைவர் மீது வழக்கு

அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மினி பஸ் டைமிங் தகராறு: பஞ்சாயத்து துணை தலைவர் மீது வழக்கு
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com