search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் இல்லாமல் இயங்கிய  கழிவு நீர் வாகன உரிமையாளருக்கு அபராதம்: நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை
    X

    நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் கழிவு நீர் வாகன உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதித்த காட்சி. 

    உரிமம் இல்லாமல் இயங்கிய கழிவு நீர் வாகன உரிமையாளருக்கு அபராதம்: நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை

    • வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் கமிஷனர் கிருஷ்ண ராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகா தார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுகள் அகற்றும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகன உரிமை யாள ருக்கு அபராதம் விதித்தும், வருங்காலங்க ளில் இது போன்ற நட வடிக்கை யில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்த னர்.

    பின்னர் கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகை யில் , நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள் வணிக வளா கங்கள் மற்றும் தொழிற்சா லைகளில் கழிவு தொட்டி களை சுத்தம் செய்ய நகராட்சியிடம் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதக் கழிவு களை மனிதனே அகற்றி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற செயல்களை தடுக்க நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 8 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். இதனை தவிர்த்து யாரே னும் அனுமதி பெறாமல் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்வதோடு, தண்ட னையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×