வடலூர் தனியார் விடுதியில் தூத்துக்குடி வாலிபர் மர்மசாவு:போலீசார் தீவிர விசாரணை

இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை.ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர்.
வடலூர் தனியார் விடுதியில் தூத்துக்குடி வாலிபர் மர்மசாவு:போலீசார் தீவிர விசாரணை
Published on

கடலூர்:

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ராஜதுரை (வயது 28). என்ஜீனியரிங் பட்டதாரி. இவர் வடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி குரல் கொடுத்தனர். இருந்தபோதும் அவர் வெளியில் வரவில்லை. இது குறித்து தனியார் விடுதி ஊழியர்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

அவரை தேடியபோது குளியலறைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதயைடுத்து வடலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும் போது திடீர் மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com