என் மலர்tooltip icon

    கடலூர்

    • இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார்
    • இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயகுமார்(வயது20). இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வீடு இருட்டாக இருக்கிறது என்று நினைத்து ஸ்விட்ச் போட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), காய்கறி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் குமரன் (வயது42),ராஜா(வயது 40). அண்ணன் தம்பி. இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோவிந்தன்அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று உள்ளார்.

    ஹோட்டலுக்கு வந்த அண்ணன் தம்பி குமரன், ராஜா இருவரும் கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்கு பதிவு செய்து குமரன் , ராஜா ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்

    • கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
    • கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 34 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 17-ந் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கிருஷ்ணகுமார் காயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சுயநினைவு திரும்பாத நிலையில் இவர் மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் கிருஷ்ணகுமார் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் டாக்டர்கள் இவர் மூளை சாவு அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

    இதனால் கிருஷ்ண குமார் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்த கிருஷ்ண குமார் குடும்பத்தினர் நேற்று உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதனையடுத்து கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பிறகு கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பை தானம் செய்த முதல் நபராக இவர் உள்ளார். இவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ண குமார் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சிறிய கிராமத்தில் இருக்கும் விவசாயி அளவிற்கு உடல் உடல் உறுப்பு தானம் செய்வது சென்றடைந்து இருப்பதால் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ண குமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    • ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.

    அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

    இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அந்த நெல்லில் தமிழில் "அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
    • மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
    • ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

    கடலூர்:

    தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ராஜதுரை (வயது 28). என்ஜீனியரிங் பட்டதாரி. இவர் வடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி குரல் கொடுத்தனர். இருந்தபோதும் அவர் வெளியில் வரவில்லை. இது குறித்து தனியார் விடுதி ஊழியர்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

    அவரை தேடியபோது குளியலறைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதயைடுத்து வடலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும் போது திடீர் மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
    • பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி தென் பெண்ணை ஆற்று பகுதியில் லாரியில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தனிபிரிவு ஏட்டு ஜனார்த்தனன் ஆகி யோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அவியனூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி (வயது 40) என்பதும், ஆற்று மணலை திருடி விற்று வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர்.
    • புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாதம் முடி வடைந்து தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வரு கிறது. பலர் புரட்டாசி மாதம் முழுவதும் அசை வத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்த நிலையில் புரட்டாசி மாதம் தற்போது முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மக்கள் குவிந்தனர்.

    ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்த நிலை யில் தற்மபோது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பொதுமக்கள் அதிகள வில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. வஞ்சரம் 700 ரூபாய், சங்கரா 300 ரூபாய், கொடுவா 350 ரூபாய், இறால் 250 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்ற விலையில் இன்று மீன்கள் விற்பனை யானது.

    • முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்:

    வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் கமிஷனர் கிருஷ்ண ராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகா தார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுகள் அகற்றும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகன உரிமை யாள ருக்கு அபராதம் விதித்தும், வருங்காலங்க ளில் இது போன்ற நட வடிக்கை யில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்த னர்.

    பின்னர் கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகை யில் , நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள் வணிக வளா கங்கள் மற்றும் தொழிற்சா லைகளில் கழிவு தொட்டி களை சுத்தம் செய்ய நகராட்சியிடம் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதக் கழிவு களை மனிதனே அகற்றி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற செயல்களை தடுக்க நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 8 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். இதனை தவிர்த்து யாரே னும் அனுமதி பெறாமல் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்வதோடு, தண்ட னையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×