கடலூர் வண்டிப்பாளையத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆட்டோவில் வந்து திருடி சென்ற வாலிபர்: சமூக வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்

சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.
கடலூரில் ஆவின் பால்பாக்கெட் திருடுவதை படத்தில் காணலாம்.
கடலூரில் ஆவின் பால்பாக்கெட் திருடுவதை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆட்டோவில் சென்ற வாலிபர் திடீரென்று தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பெட்டியை லாவகமாக திருடி கொண்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து பால் எடுப்பதற்காக வந்த நபர் பால் மற்றும் பெட்டியை காணவில்லை என தேடினார். பின்னர் மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த காட்சி வைரலாகி வருகின்றது. அதனை வைத்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com