என் மலர்
கடலூர்
- பஸ் பி.முட்லூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ளது துணி சரமேடு. இங்கு பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்கிறார்கள். மாணவர்களை அழைத்துவர தனியார் பள்ளி சார்பில் பஸ், வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை பரங்கிப்பேட்டையில் இருந்து 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் முருகன் ஓட்டி சென்றார்.
இந்த பஸ் பி.முட்லூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே மினிபஸ்சில் இருந்த 30 மாணவர்களும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினார்கள்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜெயக்குமார், சிறப்பு நிலைய அலுவலர் முருகதாஸ், நரேன், தீயணைப்பு வீரர்கள் செல்வம், குமார், பிரசாந்த் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மினி பஸ்சில் பற்றிய தீயை ½ மணிநேரம் போராடி அணைத்தனர். ஆனாலும் மினிபஸ் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான அளவிற்கு 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடு கட்டுமான பணிகள் தொடங்கியது.
- தாய் வீட்டு சீதனம் ஊர்வலமாக கொண்டு வருவதைப் போல அனைத்தையும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து முத்துலட்சுமியின் வீட்டில் வைத்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த மணலூர் காலணியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், வேலைக்கு சென்று கூலி வாங்கினால் மட்டுமே உணவு என்ற ஏழ்மை நிலையில் வசித்து வந்தார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தன்னை போலவே ஏழ்மை நிலையில் இருந்த முத்துலட்சுமி (35) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தன்னை நம்பி மனைவி, குழந்தைகள் என 6 பேர் உள்ளதை கவனத்தில் கொண்ட சக்திவேல், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் வேலைக்கு சென்று வீடு திரும்புவார். தினமும் மாலை அவர் கொண்டு வரும் கூலி பணத்தை வைத்துதான் மறுநாள் உணவு சமைக்கும் நிலையில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர், தான் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை கிடைத்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதில் தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 18-ந் தேதி, சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அவர் வெண்கரும்பூர் சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி தானாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை சற்றும் எதிர்பாராத முத்துலட்சுமி கதறி அழுதார். 5 குழந்தைகளை எவ்வாறு கரையேற்றுவது என செய்வதறியாது திகைத்தார். சக்திவேலின் இறுதி சடங்கு முடிந்தவுடன் உறவினர்கள் சென்றுவிட்டனர்.
விபத்தில் இறந்ததால், தனது குழந்தைகள் உணவுக்கே கஷ்டப்படுவதாகவும், இன்சூரன்சு அல்லது அரசு உதவி ஏதேனும் பெற்றுத் தருமாறு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜிடம் சக்திவேலின் மனைவி முத்துலட்சுமி மனு கொடுத்தார். இதனை பரிசீலித்த ஆரோக்கியராஜ், நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் 5 பேரும் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கழிகளை நட்டு, அதில் டிஜிட்டல் பேனர்களை கட்டி அதற்குள் வாழ்ந்து வந்தனர். இதனை கண்டு கண்கலங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், தன்னால் முடிந்த ஏதேனும் உதவியை இக்குடும்பத்திற்கு செய்ய முடிவு செய்தார்.
விருத்தாசலம் சரகத்திற்கு உட்பட்ட போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் இது தொடர்பாக பதிவிட்டார். இதனை பார்த்த போலீசார், போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினர். இவைகளை ஒருங்கிணைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சக்திவேல் குடும்பத்தார் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.
முன்னதாக சக்திவேலின் பெண் குழந்தைகளான சந்தியா (16), செவ்வந்தி (12) ஆகியோரை திண்டிவனத்தில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்து அங்கு படிக்க வைத்தார். ஆண் குழந்தைகளான சரண்குமார் (14), நிகாஷ் (12), நிதிஷ் (8) ஆகியோரை அதே ஊரில் உள்ள அரசு பள்ளியிலேயே படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் போலீசார் மூலம் செய்தார். தொடர்ந்து வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான அளவிற்கு 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடு கட்டுமான பணிகள் தொடங்கியது.
இப்பணிகளை விருத்தாசலம் சரகத்தில் உள்ள போலீசார், கட்டுமான பணிகளை மாறி மாறி மேற்பார்வையிட்டனர். வீடு கட்டுமான பணிகள் முடிந்து இறுதி வடிவம் பெற்றது. இதற்கான திறப்பு விழாவிற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை அழைக்க போலீசார் முடிவு செய்தனர். அவருக்கு அழைப்பு விடுத்தனர். அவரும் வீடு திறப்பு விழாவிற்கு வர சம்மதித்தார்.
இதையடுத்து கிரகப்பிரவேச பத்திரிகை அடிக்கப்பட்டது. அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது. வீட்டின் வாசல், மாடிகளில் பந்தல் போடப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. மேலும், வீட்டை மட்டும் கட்டி கொடுத்தால், அதில் வைப்பதற்கு பொருள் வேண்டுமே என்பதை உணர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், வீட்டிற்கு தேவையான தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி, சிலிண்டர் இணைப்பு, கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்தையும் வாங்கினார்.
தாய் வீட்டு சீதனம் ஊர்வலமாக கொண்டு வருவதைப் போல அனைத்தையும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து முத்துலட்சுமியின் வீட்டில் வைத்தனர். கிரகப் பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு வீட்டின் மாடியில் உணவு பரிமாறும் பணியில் இருந்து, வருவோரை வரவேற்பது, வந்து செல்வோருக்கு தாம்பூலம் வழங்குவது என அனைத்து பணிகளையும் போலீசார் போட்டி போட்டுக் கொண்டு செய்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், கருணை இல்லம் என்ற பெயரில் விருத்தாசலம் சரக போலீசாரால் கட்டப்பட்ட புதிய வீட்டினை திறந்து வைத்தார். மேலும், வீட்டின் சாவியை முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளிடம் ஒப்படைத்தார். குழந்தைகளை நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, படிப்பு தொடர்பாக எந்த உதவியாக இருந்தாலும், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
இந்த விழாவில் விருத்தாலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் போலீசார் வீடு கட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர்
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் தனலட்சுமி நகர் சேர்ந்தவர் அருள் (வயது 63). முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதிைய சேர்ந்த ஒரு சிலர் அருள் வீட்டிற்கு நேரில் சென்றனர். பின்னர் வீட்டில் ஏன் அதிகளவில் சி.சி.டி.வி கேமரா வைத்துள்ளீர்கள்? மேலும் சாலையில் செல்லும் பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று சி.சி.டி.வி.கேமராக்களை அடித்து நொறுக்கினார்கள்.
இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னாள் ராணுவ வீரரான அருள் தனது வீட்டில் அதிக அளவில் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்துக் கொண்டு சாலையில் செல்லும் பொது மக்களை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் புகைப்படத்தை எடுத்து வீட்டிற்கு வெளியில் ஒட்டி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றி செல்வதாகவும், சரியான முறையில் போக்குவரத்து விதியை கடைப்பிடிக்காமல் சென்று வருவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தன. மேலும், கடலூரில் இருந்து மதுப்பிரியர்களுக்கென பிரத்தியோக ஷேர் ஆட்டோக்கள் ஓட்டப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடலூர் நகரப் பகுதியில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் போக்குவரத்து போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் குடிபோதையில் உள்ளனரா? ஷேர் ஆட்டோவில் அதிகளவில் பயணிகளை அதிகளவில் ஏற்றி செல்கிறார்களா? டிரைவர் அருகாமையில் கூடுதல் பயணிகளை அமர வைத்து செல்கின்றனரா? உரிய ஆவணத்துடன் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த 2 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிகளவில் பயணிகளை ஏற்றி சென்ற 31 ஷேர் ஆட்டோகளுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும், கடலூர் நகர பகுதியில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்படுமென போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோக்களை தவிர்த்த மாணவர்கள், கடந்த சில தினங்களாக அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இன்று காலை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக மாணவர்கள் காத்திருந்தும் அரசு பஸ் வரவில்லை. நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பகுதி பரபரப்பானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் வரவில்லை என மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஒரு மணி நேரம் தாமதமாக அரசு பஸ் வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வருங்காலங்களில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
- பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
- போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
- ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போதுபுதுப்பேட்டை அடுத்த கொத்தி கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகுட்கா விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஜோதிலட்சுமி (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
- இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆட்டோவில் சென்ற வாலிபர் திடீரென்று தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பெட்டியை லாவகமாக திருடி கொண்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து பால் எடுப்பதற்காக வந்த நபர் பால் மற்றும் பெட்டியை காணவில்லை என தேடினார். பின்னர் மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த காட்சி வைரலாகி வருகின்றது. அதனை வைத்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.
- பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பெருமாத்தூரில் வசிப்பவர் முகமது பெரேஷ் (வயது 34). இவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக முகமது பெரேஷ் வீட்டை பூட்டிக்கொண்டு புதுவையிலேயே தங்கியுள்ளார். இதனை நோட்டம் விட்ட மர்மநபர்கள், கடந்த 18-ந்தேதி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 350 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு சிலிண்டரை திருடிச் சென்றனர். இது தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கீழ் புவனகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 22), உளுந்தூர்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (36), அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (37), புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.
மேலும், இதில் ஆனந்தராஜ், மருதுபாண்டி ஆகியோர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதும் போலீ சாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் புவனகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பெருமாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் சிலிண்டர் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- ரூ.100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, சுந்தராஜன், மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமங்களில் ரோந்து பணி மேற்கொண்ட போது ஆசூர் கிராமத்தில் சுடுகாடு அருகில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர். பொன்னங்குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே காசு வைத்து சூதாடி கொண்டி ருந்த சிவகுமார், ராஜகோபால்,ராஜ்கிரன் ஆகிய 3 பேரை கைது செய்து 40 புள்ளி தாள் ரூ 100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது.
- போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
கடலூர்:
என்.எல்.சியை கண்டித்து 7 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே உள்ள கத்தாழை, மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்கு மறு குடியமர்வு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரியும், மத்திய அரசு அறிவித்ததை மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் வழங்க மறுப்பது ஏன் என கூறி 7 கிராம மக்கள் வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பா ட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ெபாதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காட்டாண்டிக்குப்பம் பூவராகவமூர் த்தி(35),மாளிகம்பட்டு மணிகண்டன். இவர்கள் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள்மீதானவழக்குவிசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இவர்கள் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்ஆகியோர் இவர்களை கைது செய்து பிடியானை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






