என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை முயற்சி: அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- இதனால் மகேஸ்வரன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
- மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி னார்கள்.
கடலூர்:
கடலூரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 27). இவரும், பெண் ஒருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒரு நபரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இது குறித்து அப் பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை தற்கொலை செய்ய தூண்டுவதாகவும், அதிகள வில் வரதட்சணை கேட்ப தாகவும், 2 பேரும் நெருங்கி பழகி வந்த நிலை யில் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மகேஸ்வரனை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு விசாரணை முடிந்த பின் மகேஸ்வரனை போலீ சார் அனுப்பி வைத்த நிலை யில், மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி னார்கள்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த மகேஸ்வரன் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரனை மீட்டு கடலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






