என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் மஞ்சக்குப்பம் அம்பேத்கார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் மாநில மாவட்ட செயலாளர் செந்தில், முற்போக்கு எழுத்தாளர் சங்க பால்கி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி னார்கள். இதில் கல்வி மணி, நாகராஜ், ரபேல் ராஜ், புஷ்பா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் தலை வர் விஜய குமார் நன்றி கூறினார்.

    • ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
    • செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இதை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவண குமார்,உதவி பொறியாளர்கள் நாராய ணசாமி, செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சீத்தாலட்சுமி, வெங்கட சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சுந்தரபாண்டியன், குமார், ஜெகநாதன், கலா, சுரேஷ், அப்துல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார். தொடர்ந்து தந்தை, மகன் என 2 பேரும் மூர்த்தியிடம் சென்று கேட்டனர்.அப்போது இவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் காயமடைந்தனர்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீசன், ஜெயசீலன் ஆகியோர் மீதும், ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் மூர்த்தி மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயசீலன் போலீசாக பணிபுரிந்து வருவதும், தற்போது அவர் விடுமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
    • வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீரநாராயணன் ஏரி நாளடைவில் வீராணம் ஏரியாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

    5 கிலோ மீட்டர் அகலம் உடைய இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. இதனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும் இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் ஏரியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

    இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.

    கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2004-ம் ஆண்டிலிருக்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 65 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஏரி கடந்த ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதனால் வீராணம் ஏரியை நம்பியுள்ள விளைநிலங்களில் கடந்த ஆண்டு 3 போகமும் பயிரிடப்பட்டது. மேலும், சென்னைக்கு குடிநீரும் தங்கு தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரி ஒரு முறைகூட நிரம்பவில்லை. இதற்கு போதிய மழை இல்லை என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் துர்ந்து போயுள்ளதே காரணமென விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீராணம் ஏரி வறண்டது.

    இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது. ஏரியின் நீர்மட்ட அளவான 47.50 அடியில் தற்போது 20.50 அடி நீர் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏரியின் கரைப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளது. ஏரியின் மையப்பகுதி வறண்டு புல் மற்றும் பூண்டு செடிகள் முளைத்துள்ளன. மேலும், மேடாக உள்ள வீராணம் ஏரிக்கரை ஓரங்களும் வறண்டு வருகின்றன.

    இதனால் நடப்பு சம்பா பயிரிட போதுமான நீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை நாற்று விட்டு நடவு செய்துள்ள நிலையில் வீராணம் ஏரி வறண்டு வருவது விவசாயிகளிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீராணம் ஏரி நீர் கிடைக்கவில்லை எனில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு நாளொன்றுக்கு 30 கனஅடி குடிநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் வீராணம் ஏரி முழுமையாக வறண்டு போய்விடும். இதனால் நடப்பு சம்பா பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, சென்னையில் குடிநீர் பிரச்சனை உருவாகும் சூழலும் உருவாகியுள்ளது.

    • மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
    • நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியபகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களுடன்2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம். இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது. எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.
    • பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசு துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன் ,கிருஷ்ணமூர்த்தி தங்கவேல் ,பரமசிவம் ,சித்ரா ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மணி தேவன், சீனிவாசன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 48 பேரை கைது செய்தனர்.

    • சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி எதிர்பாராத விதமாக வீரப்பன் மீது மோதினார்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே பு. உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன்(வயது70) விவசாயி. இவர் சாலை ஓரம் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக மோட்டர் சைக்கிள் வந்த சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி எதிர்பாராத விதமாக வீரப்பன் மீது மோதினார். இதில் அவர் தூக்கி எறிய ப்பட்டு படுகாயம் அடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
    • மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர்.

    கடலூர்:

    சென்னை மற்றும் புதுவைக்கு ஏராளமான வெளிநாட்டினர் நேரில் வருகை தந்து, அதன் பின்பு சிதம்பரம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் வழியாக சென்ற வெளிநாட்டினர் கடலூர் உழவர் சந்தைக்கு சென்றனர். பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த பழ வகைகளை வாங்கி ருசித்து பார்த்தனர்.

    காய்கறிகள் வாழைத்தார்கள் போன்றவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை நடப்பது குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை வெளிநாட்டினருடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டு வெளிநாட்டினருக்கு கூறினார். மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர். 

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்சப்.இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ப னை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 57) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் நல்ல நேரம் லாட்டரி சீட்டு, தங்கம் லாட்டரி சீட்டு ஆகிய வைகளை விற்பனைக் காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிட மிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்யப்பட்டது. பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இதனால் மகேஸ்வரன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
    • மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி னார்கள்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 27). இவரும், பெண் ஒருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒரு நபரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    இது குறித்து அப் பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை தற்கொலை செய்ய தூண்டுவதாகவும், அதிகள வில் வரதட்சணை கேட்ப தாகவும், 2 பேரும் நெருங்கி பழகி வந்த நிலை யில் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மகேஸ்வரனை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு விசாரணை முடிந்த பின் மகேஸ்வரனை போலீ சார் அனுப்பி வைத்த நிலை யில், மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி னார்கள்.

    இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த மகேஸ்வரன் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரனை மீட்டு கடலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
    • தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 19). இவர் மடப்பட்டு நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை ஜெயராமன் புகார் கொடுத்தார்.

    அதில், அதே ஊரை சேர்ந்த சுந்தர் (எ) தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காவலர் பயிற்சி பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
    • இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள மணலூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவருடைய குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை வீட்டில் இருந்த துணிகள் மட்டும் எரிந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×