என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் போலீசார் வாகன சோதனை: உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
    X

    கடலூரில் போலீசார் வாகன சோதனை: உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

    • போலீசார் காரில் வந்தவரிடம் வெள்ளி பொருட்களுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.
    • வெள்ளி நகைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் வெள்ளி கொலுசு, மோதிரம், விளக்கு உள்ளிட்ட 4 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் காரில் வந்தவரிடம் அதற்குரிய ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.

    இதனைதொடர்ந்து அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி (52) என்பதும், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் அந்த வெள்ளி நகைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×