என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribal Darkness"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் மஞ்சக்குப்பம் அம்பேத்கார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் 180 மனைபட்டா வழங்கிய பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு இடத்தை காண்பித்து அளந்து கொடுக்க வேண்டுமென நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் மாநில மாவட்ட செயலாளர் செந்தில், முற்போக்கு எழுத்தாளர் சங்க பால்கி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி னார்கள். இதில் கல்வி மணி, நாகராஜ், ரபேல் ராஜ், புஷ்பா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் தலை வர் விஜய குமார் நன்றி கூறினார்.

    ×