search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் வழிந்தோடிய தண்ணீர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: கடலூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
    X

    கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் சாலையில் வழிந்தோடும் நீரினை படத்தில் காணலாம்.

    சாலையில் வழிந்தோடிய தண்ணீர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: கடலூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
    • இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது.

    கடலூர்:

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கடலூரின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குண்டு உப்பலவாடியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் இருந்து தண்ணீர் வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட வால்வை மூடி தண்ணீர் வருவதை நிறுத்தினர். இதனால் கடலூரில் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×