என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
செஞ்சி, மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு
- ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
- செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இதை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவண குமார்,உதவி பொறியாளர்கள் நாராய ணசாமி, செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சீத்தாலட்சுமி, வெங்கட சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சுந்தரபாண்டியன், குமார், ஜெகநாதன், கலா, சுரேஷ், அப்துல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.






