பண்ருட்டி அருகே காவலர் பயிற்சி பள்ளி மாணவி மாயம்

பண்ருட்டி அருகே காவலர் பயிற்சி பள்ளி மாணவி மாயம்

பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 19). இவர் மடப்பட்டு நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை ஜெயராமன் புகார் கொடுத்தார்.

அதில், அதே ஊரை சேர்ந்த சுந்தர் (எ) தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காவலர் பயிற்சி பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com