பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார்இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அருகே  மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயகுமார்(வயது20). இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வீடு இருட்டாக இருக்கிறது என்று நினைத்து ஸ்விட்ச் போட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com