என் மலர்
கடலூர்
விற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் இணை சார்பதிவாளர் - உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ஞானசேகர் (வயது 42). விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக புருகீஸ்பேட்டையில் உள்ள வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான விற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய கடலூர் 2-வது இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் இணை சார் பதிவாளர் பூசைதுரை(45), உதவியாளர் செல்வத்தை (56)அணுகி, பத்திரத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்கள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானசேகர், இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை பத்திர நகல்களுடன் வைத்து இணை பதிவாளர் பூசைதுரையிடம், ஞானசேகர் வழங்கினார்.
அதற்கு அவர் உதவியாளர் செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஞானசேகர் லஞ்ச பணத்தை உதவியாளர் செல்வத்திடம் வழங்கினார். இதை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா, சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். கடலூர் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையால் அங்கிருந்த இடைத்தரகர்கள் அவசர, அவசரமாக வெளியேறினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சேத்தியாத்தோப்பு:
மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நங்குடி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அபய குரல் எழுப்பினர். உடன் அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், பஸ் டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர் ( வயது 42), அதே ஊரை சேர்ந்த கண்டக்டர் புண்ணியமூர்த்தி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜமன்னார்குடியை சேர்ந்த அஜய் (26), பண்ருட்டி தேவநாதன் (34 ) ஆகியோர் காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்த 4 பேரும் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ் கிரைன் மூலம் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தி கொண்டனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் விஜயலட்சுமி (வயது 19). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.. இவர் அதே ஊரைச்சேர்ந்த அங்கப்பன் என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணமான பின்பும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி கல்லூரிக்கு சென்று வந்த விஜயலட்சுமியை கணவர் அங்கப்பன் மற்றும் அவரது உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டின் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து மூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் கல்லூரி மாணவி இறந்ததால் அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பூர் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினா்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பூர்:
வேப்பூர் அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சநாதன் மகள் திலகவதி (வயது 22). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர், திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திலகவதியும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் கோபி (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கோபியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபி, திலகவதியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அவரிடம் பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த திலகவதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதன் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி, அவரது தந்தை சின்னசாமி, தாய் ரவியம்மாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். சின்னசாமி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், திலகவதியின் தற்கொலைக்கு காரணமான கோபியின் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி, திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேப்பூர் கூட்டுரோட்டில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோபியின் குடும்பத்தினர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதனை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி:
நெய்வேலி வட்டம் 13 என்.எல்.சி. குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் முருகேசன் (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முருகேசன் தனது வீட்டிற்கு அருகில் காலியாக இருந்த வீட்டின் முன்புறம் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் கதறி அழுததோடு, இதுபற்றி நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில் எனக்கு கடன் கொடுத்தவர்கள், தற்போது கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முருகேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்துவட்டி கொடுமையால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை செய்துகொண்டதாக பரவிய தகவலால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருந்தோம். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களை உதாசினப்படுத்தினர். எனவே தான் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்.
கூட்டணியில் இருந்ததால் நம் கைகள் கட்டப்பட்டிருந்தது. இப்போது சுதந்திர பறவையாக உள்ளோம். இனி அ.தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான். தே.மு.தி.க. தயவால் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்று நினைக்கிறார். இதனை அ.தி.மு.க.வினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும். இனி சத்திரியனாக இருக்க வேண்டும். விஜயகாந்த், பிரேமலதாவை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் 2 பேரையும் சேர்த்து என் உருவத்தில் பார்ப்பீர்கள்.
எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் பேசினார்.

கடலூர் முதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். மீனவர். இவரது மனைவி கலா(50). சேகர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டு செல்போனுக்கு உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர், சேகரின் வீட்டுக்கு வந்து பார்த்த் போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. வழக்கமாக சேகர் மீன்பிடிக்க செல்லும் போது ஒரு சாவியை அருகில் உள்ள ஒரு கடையில் கொடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சாவியை வாங்கி வந்த, உறவினர் கதவை திறந்து பார்த்தார். அங்கு கலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது தூக்கு கயிறு ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. இதன் மூலம் கலா தற்கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவில் தூக்குபோட்டு கொண்டு இருக்கலாம். அப்போது கயிறு அறுந்து அவர் கீழே விழுந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மோப்ப நாய் அங்கிருந்து எங்கும் செல்லாமல் அந்த பகுதியிலேயே நின்றது.
தொடர்ந்து கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி அருகே டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனகிரி:
புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர், டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில் அவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து பள்ளி மாணவர்களுக்கு ஏன்? மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் என்று மேற்பார்வையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் உரிய பதில் கூறவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுசம்பந்தமாக விசாரிப்பதற்காக மேற்பார்வையாளர் மற்றும் அவருடைய உதவியாளர் ஒருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரியில் குளியலறைக்கு குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவியை படம் பிடிக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புவனகிரி:
புவனகிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதேஊரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த புவனகிரி அருந்ததியர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் வெங்கடேசன் என்பவர், மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப அலுவலர் நிலை 2, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த 179 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்ட பொறுப்பையோ அல்லது அதற்கு இணையான பொறுப்பையோ வழங்காமல் ஐ.டி.ஐ. மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்குரிய நுழைவு நிலை தொழில்நுட்ப பணி என்ற பதவியை வழங்கியுள்ளனர்.
இதனால் பணி நிரவல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் செய்ய வேண்டும், பணிநிரவல் ஆணையை ரத்து செய்துவிட்டு, புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், தொழில்நுட்ப உதவியாளர்களின் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு புயல் மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டதால் வீராணம் ஏரி கரை ஓர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் தீவு போல் காட்சி அளித்தது. தற்போது வடவாறு வழியாக தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. அதோடு மழையும் பெய்யவில்லை.
ஆனால் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 40.59 அடியாக குறைந்துள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்காக 79 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பிவைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரியும், தாசில்தாருமான விஜயா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது காரில் வந்த 3 பேரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி, அவர்களை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் ரூ.4¼ லட்சம் வைத்திருந்தனர். இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த செல்வராஜ். பார்த்திபன், பிரதீப் என்று தெரிந்தது.
அவர்கள், சிதம்பரத்தில் பிடிப்பட்ட லாரிகளுக்கு அபராதம் கட்டுவதற்காக செல்வதாக கூறினர்.ஆனால் பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கடலூர் தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.