என் மலர்tooltip icon

    கடலூர்

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்‌.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.

    மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி கீழ்கவரப்பட்டை சேர்ந்த நாகையன் என்பவரது மகன் அரிச்சந்திரன் (வயது 56) என்பவர் பாண்டிச்சேரி சாராய பாக்கெட் வைத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அரிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), இவர் தற்போது பண்ருட்டி அடுத்த திருவதிகை வள்ளி கந்தன் நகரில் தங்கி இருந்து தனது மூன்று சக்கர ஆட்டோவில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடும் வாகனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள ஏ.மணி நகரில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக வீதியில் சுற்றித்திரிந்தார். இதனால்அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்த ஆடைகளை அவருக்கு அணிவிக்க முயன்றனர். அதை அணியாமல் நிர்வாணமாகவே மூதாட்டி சுற்றி திரிந்தார்.

    தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர். பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இக்னைட் டிரஸ்ட் மூலம் கடலூர் ஓயாசிஸ் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பராட்டுகள் குவிந்து வருகிறது.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
    • வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக்காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியது. ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 75 சதவீதமும், 40 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
    • மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    கடலூர்:

    கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 21.11.2023 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர் பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேலும், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பண்ருட்டி கோட்டப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.
    • வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது. 

    • இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை.
    • வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை. தெருவிளக்கு வசதிகளும் இல்லை, கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே , வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .ஆனால் 15 வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை. கொசுமருந்து அடிப்பது இல்லை. தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க . வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது வார்டு திருவதிகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×