கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com