search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிற்சி வகுப்பு நடத்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் கடலூர் கலெக்டர் தகவல்
    X

    பயிற்சி வகுப்பு நடத்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் கடலூர் கலெக்டர் தகவல்

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×