search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fisheries Department"

    • மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
    • மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் அதளை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலாமீட்டர் வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது, எனவே மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை மீன்பிடிக்க மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.
    • வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது. 

    • கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
    • விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.

    புதுச்சேரி:

    அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மூர்த்திக்குப்பம், நரம்பை கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டது.

    நிர்வாகிகள் வடிவேல், பெரியாண்டி, கதிரவன், கலைஞானம், வாசகன், உத்திராடம், புண்ணி யமூர்த்தி, யோகநாதன், நிர்வாகக்குழு உறுப் பினர்கள், பொதுமக்கள் முருகன், குமார், பிரகாஷ், பிரவீன், செல்வகுமார், கலையரசன், வினோத், ஞானவேல் பேசினர்.

    கூட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.

    அத்தகைய வங்கிகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தப் படவில்லை. புதுவையில் மீனவர்களுக்கு தனி வங்கி கிளையை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளை செப்பனிட்டு தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மண்டல அமைப்பாளர் கலைமணி செய்திருந்தார்.

    • புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.
    • இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.

    இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து புதுவை மீன்வளத்துறை மாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைத்திரும்ப வேண்டும்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு ன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மண்டல இணை இயக்குநர் உதவி இயக்குநர் மற்றும் மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்கள் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    ரூ. 5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்

    மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை நெல்லை கோட்ட உதவி பொறியாளர் தயாநிதி வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, தி.மு.க. வட்ட செயலாளர் ரவிசந்திரன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் அமலசேவியர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளார் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் ரவி, மீன்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபானி, மீன்பிடித்துறைமுக மேலாண்மை மீன்துறை ஆய்வாளர்கள் ஆரோக்கி யசாமி, பொன் சரவணக்கண்ணன், தாசில்தார் பிரபாகர், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவானி மார்ஷல், எடின்டா, சுப்புலட்சுமி, சரண்யா, வைதேகி, இசக்கிராஜா, மாநகர தி.மு.க. அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ் மற்றும் ரேவதி, பெல்லா, அருணாதேவி, கவிதாதேவி, மணி, அல்பட், மகேஷ்வரசிங், பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் நன்றி கூறினார்.

    • புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரமானது கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பணை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டபுளி ஆகிய கிராமங்களுக்கு நடுநிலையான இடத்தில் அமைந்துள்ளது.

    ரூ. 1.60 கோடி

    இதனால் மீன்வள மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் அலுவலகம் மீனவ கிராம மக்களுக்கு பயன்படும் வண்ணம் ராதாபுரம் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்தது.

    இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.

    அலுவலகம் இங்கு அமைவதால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அரசு அலுவலர்கள் மூலம் தெரிந்து திட்டம் கிடைக்க எளிமையாக இருக்கும். மீனவர்களின் பயிற்சி மற்றும் கூடங்கள் அமைக்க சிறப்பாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, பரிமளம், மவுளின், இசக்கிபாபு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், ராதிகா சரவணகுமார், மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ராமையா, அகஸ்டின், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஷ்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், காமில், எழில் ஜோசப், குமார், டென்னிஸ், முத்தையா, கோகுல், வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மீன்வளத்துறை சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ.160 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லியில் மத்திய மீன்வள அமைச்சக செயலாளர், மீன்வள அமைச்சக இணை செயலாளர், மீன்வள ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது புதுவை அரசின் மீனவர் நலம் மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய மீன்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுவையில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், காரைக்கால் மற்றும் ஏனாம் மீன்பிடிதுறைமுகங்களை நவீனப்படுத்தி விஸ்தரிக்கவும், புதுவை பகுதியில் நல்லவாடு, பெரியகாலாப்பட்டு பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மொத்தம் ரூ.140 கோடி நிதி வழங்க மத்திய மீன்வள அமைச்கம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் நிதிஒதுக்கீடு புதுவை அரசுக்கு கிடைக்கும்.

    மேலும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் புதிய மீன் ஏலக்கூடம், மீன்அருங்காட்சியகம், நவீன மொத்த மற்றும் சில்லரை மீன் வணிக வளாகம் ஆகியவையும், மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண உதவியை ரூ. 4 ஆயிரத்து 300 ஆக உயர்த்தவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு மானியம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடி வழங்கவும், நன்னீர் மீன் வளர்ப்புக்கு மானியமாக ரூ 1 லட்சமும், உவர்ப்பு நீர் மீன்வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.26 லட்சமும், மீன்பிடி படகுகள் மற்றும் என்ஜின்களை புதுப்பித்து உதவி வழங்க ரூ.60 லட்சமும் மத்தியஅரசு நிதி வழங்கி உள்ளது.

    புதுவை அரசு மீன்வளத்துதுறை சார்பில் புதிய திட்டங்களுக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்பித்து விடுத்த கோரிக்கைகளை அடுத்து மொத்தம் ரூ.159 கோடியே 67 லட்சம் அளவிலான நிதி ஒதுக்கீடு மத்திய மீன்வள அமைச்சகத்திடமிருந்து கிடைத்துள்ளது.

    இந்த தகவலை புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ×