என் மலர்
கடலூர்
- பண்ருட்டியில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கடத்திய புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தீபாவளி ஒட்டி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் புதுவை யில் இருந்த அரசு அனுமதி இல்லாமல் கள்ள த்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு பண்ரு ட்டியில் விற்பனை செய்யப்படு வதாக போலீ சாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் (பொறுப்பு) நந்த குமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ஏராளமான புதுவை மது பாட்டிகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகி ன்றனர். இதே போல புதுப்பேட்டை, காடாம்பு லியூர், முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.
- வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
- நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.
கடலூர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகே கடந்த 18 ம் தேதி காலை மணிமுக்தாற்றின் கரையோரத்தில் 65வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் பிரேதம் மர்மமான முறையில் கிடந்தது . இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திட்டக்குடி புதுதெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் ராஜேந்திரன்(61). இவரது மனைவி மணிமேகலை அகரம்சீகூரில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்தார் அதே அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வந்தவர் நல்லம்மாள் (66). மணிமேகலையும் நல்லமாளும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற பின் நல்லம்மாள் ராஜேந்திரனின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். ராஜேந்திரன் மனைவி மணிமேகலை கடந்த ஒன்றை வருடமாக உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். ராஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் தன்னை திருப்பதிக்கு அழைத்துச் செல்லுமாறு நல்லம்மாள் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் அவர் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவில்லை. தனக்கு கடன்சுமை அதிகமானதால் ராஜேந்திரன் நல்லம்மாளிடம் கடன் கேட்டுள்ளார் நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார். நல்லம்மாலிடம் நகைகளை வைத்து கொண்டு தர மறுத்ததையறிந்து நல்லம்மாவை எப்படியாவது பணம் நகை ஆகியவற்றை எடுத்து தனது கடனை அடைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனசு சரியில்லை நல்லூரில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டுமென ராஜேந்திரனிடம் கூறியுள்ளார் நல்லம்மாவை கொலை செய்வதற்கு இதை சரியான சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு ராஜேந்திரன் கடந்த 17 -ந் தேதி மாலை நல்லம்மாளை திட்டக்குடியில் இருந்து நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலுக்கு ராஜேந்திரன் நல்லம்மாளை அழைத்துச் சென்றுள்ளார்.
கோயில் பூட்டி இருந்ததால் கோயில் வெளியே இருந்து சாமி கும்பிட்டனர் நல்லம்மாள் சிறுநீர் கழிக்க கோயிலின் மேற்கு பக்கம் நோக்கி சென்றுள்ளார் அவரை பின் தொடர்ந்து சென்ற ராஜேந்திரன் நல்லமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நல்லம்மாள் சுயநினைவு இழந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை தெரிந்த பின் அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம், ஜெயின் நகைகளை எடுத்துக்கொண்டு நல்லம்மாவின் உடலை அங்கிருந்த புதரில் போட்டுவிட்டு ராஜேந்திரன் தப்பி திட்டக்குடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் போலீசார் மூதாட்டியை ஆதாயம் தேடி கொலை செய்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
- கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்று கொண்டு இருக்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை, சஷ்டி தொடங்குவதால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் தொடர்ந்து இருந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
இதில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 800 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையிலும் விழா காலங்கள் தொடர்ந்து இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
- புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் கிராமத்தைசேர்ந்தவர் ராஜா. இவரதுமனைவிகாயத்ரி, இவர்களுக்கு 2மகள்கள் கோபிகா,தேஜா உள்ளனர். காயத்ரி தனது 2 மகளுடன் கடந்த29 -ந் தேதி திடீரென்றுகாணாமல் போனார் . பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
இதுபற்றி புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார். பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரின்தீவிர முயற்சியினால் 2மகளுடன் காயத்ரியை மீட்டனர். அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் இதனால் அவரது குடும்பத்தினர் மகழ்ச்சி தெரிவித்தனர்.
- மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
- தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது.
கடலூர்:
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக வலுவடைந்து வங்காளதேசம் அல்லது மேற்கு வங்க கரையோரம் 25-ந தேதி காலை கரை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தினால் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 1000 த்திற்க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று கடலூர் பண்ருட்டி விருத்தாச்சலம் நெய்வேலி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை(24-ந் தேதி) தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணிக்கடைகள், பட்டாசு கடைகள் பல்வேறு கடைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது. மேலும் சாலை யோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 குடிசை வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி ஆறுகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வரத்து குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்காத வகையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருவதையும் காணமுடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு- பெல்லாந்துறை - 30.4, பண்ருட்டி - 26.0, குறிஞ்சிப்பாடி - 20.0, லக்கூர் - 19.2, தொழுதூர் - 18.0, சேத்தியாத்தோப்பு - 13.0, அண்ணாமலைநகர் - 12.8, வடக்குத்து - 12.0, பரங்கிப்பேட்டை - 11.0, வானமாதேவி - 10.6, விருத்தாசலம் - 9.3 எஸ்ஆர்சி குடிதாங்கி - 9.25, கீழ்செருவாய் - 8.0 மீ-மாத்தூர் - 6.0 ஸ்ரீமுஷ்ணம் - 5.2 16,. வேப்பூர் - 5.0. சிதம்பரம் - 5.0.
- தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர்.
- கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது.
கடலூர்:
கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.
இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் எதுவும் வாங்கவில்லை. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை முதல் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். அன்று முதல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால் மீன் மார்க்கெட்டுகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்து வருகிறது.
நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகையாகும். எனவே வெளியூர்களில் வேலைபார்க்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடலூருக்கு தற்போது வந்துள்ளனர். தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது. அதிக அளவில் மக்கள் வந்துள்ளதால் மீன்கள் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.
- வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார்.
- சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார். அப்போது முன்பணமாக 4000 கொடுத்துவிட்டு மீதி பணம் தருவதாக கூறியுள்ளார். மீதி பணம் தராததால் செல்வம் சம்பவத்தன்று சங்கரிடம் பணத்தை கேட்டார்.
அப்பொழுது சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சங்கர் பிரபு புண்ணியமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள்.
- லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர்.
கடலூர்:
தீப திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட மக்கள் தீபாவளி புத்தாடை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த கிராம மக்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர்தான் வரவேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடலூர் மாவட்ட கிராம மக்கள் திருப்பாதிரிபுலியூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கடலூர் லாரன்ஸ்ரோடு, இம்பீரியல் சாலை, சுப்புராயலுசெட்டி தெரு, நகை கடை வீதிகளில் படையெடுக்கிறார்கள். இதனால் கடலூர் நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் உள்ளது. இதன் காரணமாக இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம்மணிக்கூண்டு, நேதாஜி சாலை மற்றும் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நேரம் ஆக ஆக மக்கள் அதிகளவில் குவிவதால் இம்பீரியயல் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதனை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் 1,600 போலீசார் ரோந்து வருகிறார்கள். அதோடு டிரோன் காமிரா மூலமும் திருடர்கள், செல்ேபான் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். இது தவிர போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மேற்பார்வையில் லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர். மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை ஓர வியாபாரிகளும் துணிகளை விற்பனை செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் துணிரகங்களை வாங்குவதற்கு கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக குவிவதால் கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
- கடலூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே அம்பலவாணன் பேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் தனது வீட்டின் எதிரில் 5 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று 2 ஆடுகளை திருடிகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்து, கட்டியாங்குப்பம் என்ற பகுதியில் அவர்களை மறித்து பிடித்தனர்.
பின்னர் 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் 2 நபர்களை விசாரணை செய்தனர் அப்போது கடலூர் சேடப்பாளையம் சேர்ந்த அருண் (வயது 23), சின்ன காரைக்காடு சேர்ந்தவர் கபாலீஸ்வரர் (வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
- சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாரா ணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
- திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 24). விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி படித்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாராணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தாய் உமாராணி பணம் என்னிடம் இல்லை நாளை தருகிறேன் என கூறினார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தனது தாய் உமாராணிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த உமாராணி உடனடியாக தனது மகள் சந்தியாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
- உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.
கடலூர்:
சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி:-
சிதம்பரம் நகரில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் நானும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருண்மொழி , ரவிச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் உணவு நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.அப்போது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.
- நகர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
- முருகேசன் உடலை நேற்று அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு பாடை கட்டி தூக்கி சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் கோமுகி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்கபட்டிருந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் வடக்கு பகுதியில் அடித்து சென்றதால் பாதிபாலம் இடிந்து விழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நல்லூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நகர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது உடலை நேற்று அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு பாடை கட்டி தூக்கி சென்றனர்.
அப்போது கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள வழியாக இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மயானத்திற்கு சென்றனர். ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வயதானவர்களும் குறைந்த வயது உள்ளவர்களும் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கரையிலேயே நின்றுவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நகர் கிராமத்திலுள்ள கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






