என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில்  மூதாட்டியை கொலை செய்தவர் கைது
    X

    வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது

    • வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகே கடந்த 18 ம் தேதி காலை மணிமுக்தாற்றின் கரையோரத்தில் 65வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் பிரேதம் மர்மமான முறையில் கிடந்தது . இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திட்டக்குடி புதுதெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் ராஜேந்திரன்(61). இவரது மனைவி மணிமேகலை அகரம்சீகூரில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்தார் அதே அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வந்தவர் நல்லம்மாள் (66). மணிமேகலையும் நல்லமாளும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற பின் நல்லம்மாள் ராஜேந்திரனின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். ராஜேந்திரன் மனைவி மணிமேகலை கடந்த ஒன்றை வருடமாக உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். ராஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த வாரம் தன்னை திருப்பதிக்கு அழைத்துச் செல்லுமாறு நல்லம்மாள் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் அவர் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவில்லை. தனக்கு கடன்சுமை அதிகமானதால் ராஜேந்திரன் நல்லம்மாளிடம் கடன் கேட்டுள்ளார் நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார். நல்லம்மாலிடம் நகைகளை வைத்து கொண்டு தர மறுத்ததையறிந்து நல்லம்மாவை எப்படியாவது பணம் நகை ஆகியவற்றை எடுத்து தனது கடனை அடைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனசு சரியில்லை நல்லூரில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டுமென ராஜேந்திரனிடம் கூறியுள்ளார் நல்லம்மாவை கொலை செய்வதற்கு இதை சரியான சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு ராஜேந்திரன் கடந்த 17 -ந் தேதி மாலை நல்லம்மாளை திட்டக்குடியில் இருந்து நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலுக்கு ராஜேந்திரன் நல்லம்மாளை அழைத்துச் சென்றுள்ளார்.

    கோயில் பூட்டி இருந்ததால் கோயில் வெளியே இருந்து சாமி கும்பிட்டனர் நல்லம்மாள் சிறுநீர் கழிக்க கோயிலின் மேற்கு பக்கம் நோக்கி சென்றுள்ளார் அவரை பின் தொடர்ந்து சென்ற ராஜேந்திரன் நல்லமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நல்லம்மாள் சுயநினைவு இழந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை தெரிந்த பின் அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம், ஜெயின் நகைகளை எடுத்துக்கொண்டு நல்லம்மாவின் உடலை அங்கிருந்த புதரில் போட்டுவிட்டு ராஜேந்திரன் தப்பி திட்டக்குடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் போலீசார் மூதாட்டியை ஆதாயம் தேடி கொலை செய்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×